உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் தீவினை உருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால்' –22/19–24 என்று முன்னுட்களில் நிகழ்ந்த மருதியின் வரலாறு, விசா கையின் வரலாறு இவைகளைக் காட்டி அக் கற்புடைப் பெண்டிரிடம் கருத்திருத்திய மன்னவர் மக்கள் உற்ற நிலையைக் காட்டுகின்றனர். இவைகளைக் கேட்ட அரசன், 'இன்றே அல்ல என்றெடுத் துரைத்து நன்றறி மாதவிர்! நலம்பல காட்டினிர் இன்றும் உளதோ இவ்வினை உரையும்" 22/163-165 எனக் கேட்கின்றன்.அப்போதும் அனைவரும்நேரிடையாக முதலில் எடுத்துக் கூறது, அவருள் சிறந்த ஒருவரைப் பேச வைக்கின்றனர். அவரும் வேலும் கோலும் அருட் கண் விழிக்க என வாழ்த்தியும் ஐம்பெரும் பாதகச் செயல்களின் கொடுமைகளை விளக்கியும், பிறகே நடந்த தைச் சொல்லுகிருர். அனைத்தையும் கேட்ட மன்னன் தன் மகன் இறந்ததற்கு வருந்தாது, தான் தரவேண்டிய தண்ட னையை விஞ்சையன் தந்தானே என்பதற்காகவே வருந்து கிருன் என்பதை மேலே கண்டோம். இவ்வாறே சமயங்களை விளக்கும் இடங்களிலும் அற முரைக்கும் இடங்களிலும் சாத்தனர் கொள்வோர் கொள்வகை அறிந்து உளங்கொளச் சொல்லுகின்ருர். அந் தந்த இடங்களுக்கு ஏற்ருற்போன்று கதைகளையும் அமைக்கும் திறன் அவரிடம் உண்டு. இந்த நாளில் 'இராசாசி அவர்கள் சிறுகதைகள் மூலம் பல உண்மை களை விளக்குவர் என்பர். அப்படியே இடைக்காலத்திலும் பல உள்ளமையைப் பேரிலக்கியங்களிலும் பிறவற்றிலும் காண்கின் ருேம். இவற்றிற்கெல்லாம் பிறப்பிடமாகச் சாத்த னர் தம் பெருங்கதைக்கு இடையே சிறு சிறு கதைகளைப் பாத்திரங்கள் வாயிலாகவே சொல்லவைத்துத் தம் கருத்