பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149. தினையும் வாழ்க்கை நெறியினையும் விளக்குகிறர். அர சனுக்கு அறிவோர் உணர்த்திய இரு கதைகளைக் கண் டோம்; இன்னும் சில காண்போம். சிறு கதைகள் சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போது, மாடலன் வாயி லாகவும் மதுராபுரித் தெய்வம் வாயிலாகவும் பிறவகை யிலும் சில கதைகளைத் தெரிந்து கொள்ளுகிருேம். அவை பெரும்பாலும் அந்நூலுள் வரும் பாத்திரங்களின் சிறப்பை உணர்த்துவனவாகவும் அமைகின்றன. சாத்தருைம் அந்த வகையில் பல கதைகளைத் தம் நூலில் புகுத்துகின்ருர் இடங்களுக்குப் பெயர் வந்த வரலாறு முதலியனவும் பல் வேறு முனிவர்தம் கதைகளும் சாத்தனர் வழியில் புதிதாக நாம் கேட்கின்ருேம். பல வடநாட்டுக் கதைகளும் பிறவும் இக் காப்பியத்தில் இடம்பெறக் காண்கின்ருேம். தமிழ் நாட்டிற்கே சிறப்பான கொள்கைகளையுடைய சில கதை களையும் காண முடிகின்றது. இந் நூலில் வரும் பாத்திரங் களாகிய ஆபுத்திரன், ஆதிரை, சுமதி, துவதிகன் போன் முர்தம் வரலாறுகளும்கூடக் கதை போன்றே கூறப்பெறு கின்றன. எனவே, சாத்தனர், துறவுக் காப்பியத்தைச் சுவை கெடாது-இலக்கியம் நலம் சிதையாது கொண்டு செல்ல இவ் உத்தியைக் கையாண்டாரோ என எண்ண வேண்டியுள்ளது. இவற்றுள் சில கதைகளை நாம் கடந்த நாள்களிலும் இன்றும் கண்டோம். எல்லாக் கதைகளையும் எடுத்தியம்புதலும் எளிதன்று; தேவையற்றதும் கூட. சில முக்கியமான கதைகளையும் கதைப் போக்குகளையும் முன் னரே கண்டுள்ளமையின் ஈண்டு ஒரு சிலவற்றைத் தொட் டுக்காட்டி மேலே செல்லலாம் என எண்ணுகிறேன். ஆசிரியர் சுட்டப் பெருத இந்நூலின் பதிகத்திலேயே நம் நாட்டுக்குச் சம்புத் தீவம் என்ற பெயருக்கு ஒரு கதை யும் காவிரியின் உற்பத்திக்கு ஒரு கதையும் காட்டப்பெறு கின்றன. இத்தகைய கதைகள் பின்னல் தோன்றிய சமய 10 -