பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாகக் கூற, அந்நிகழ்ச்சிக்கு அடிப்படையான மதுரை நிகழ்ச்சிகளை முற்றும் அறியாது தடுமாறினன் செங்குட்டு வன்; மற்றவரும் திகைத்தனர். அதுகாலை, அங்கிருந்த தண்டமிழ்ச் சாத்தனர் அது நிகழ்ந்தவற்றை விளக்கி உரைத்தனர். சாத்தனர் வழியே கண்ணகியின் பெரும் புகழ் உணர்ந்த செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்லெ டுக்க வடநாடு சென்ருன். பிறகு வஞ்சியில் கோட்டம் வகுத்து வழிபாடாற்றினன். - கற்கோயில் கட்டிய அண்ணனின் செயலிலும் விஞ் சிய வகையில் கலைக்கோயில் கட்ட எண்ணிற்று இளங் கோவடிகளின் உள்ளம். எனவே கோவலன் கண்ணகி வரலாற்றை மையமாக வைத்து, என்றும் வாழும் மூன்று உண்மைகளை உலகுக்கு உணர்த்த நினைத்தார் அவர். ஆயினும் அந்த வரலாற்றுக் காப்பியம் தமிழ்நாட்டு இலக் கிய மரபுக்குப் புதியது என எண்ணி மயங்கினர். எனவே, அப் புதுத் திருப்பத்திற்கு இருபெரும் புலவருமே சேர்ந்து செல்லலாம் என எண்ணினர். எனவே, நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்' என்று சாத்தனரை வேண்டி னர். பாட்டுடைச் செய்யுளாம் சிலம்பு புது மரபுனைப் பற்றி யது அன்ருே? எனவே, தனியாகச் செல்வதைக் காட்டி லும் இருவரும் இணைந்து செல்லின்,பழிப்பார் இருவரையும் சேர்த்துப் பழிப்பின்,பளுக் குறையும் எனக் கருதியிருப்பர். எனினும் சாத்தனர் அந்த வகையில் புதுத் திருப்பத்திற்குத் தோள் கொடுக்க இசையவில்லை. எனவே, அடிகளார் வேருெரு வகையில் சாத்தனரைப் பின்னியே செல்ல முடிவு செய்துவிட்டார். இருவரும் காப்பியம் இயற்ற வேண்டும் என முடிவு செய்தனர்; ஆயினும் ஒரே காப்பி யத்தை அன்று. இளங்கோவடிகள் கண்ணகி கோவலன் வரலாற்றினைப் பாட அதைச் சாத்தனர் கேட்கவேண்டு மென்றும், சாத்தனர் அவர்தம் மகளாகிய மணிமேகலை வர லாற்றைப் பாட இளங்கோவடிகள் கேட்க வேண்டுமென் றும் முடிவு செய்தனர். இரன்டையும் பின்னிப் பிணைத்தே 'இரட்டைக் காப்பியம்' எனும் வகையில் அமைத்தனர்.