பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 புதுத் திருப்பத்தைத் தமிழ் உலகம் ஏற்றல் இருவருக்கும் புகழ்; இன்றேல் வரும் இகழ்ச்சி இருவருக்கும் உரித்து’ என்ற உணவில் இருவரும் தனித்தனியாகக் காப்பியங் களைச் செய்து இரட்டைக்காப்பியங்களாக்கி உலகுக்குத் தந்தனர். இந்த உண்மைகளையெல்லாம் அவர்தம் நூற் பதிகங்களே நமக்கு உணர்த்துகின்றன. 'முடிகெழு வேந்தர் முவர்க்கு முரியது அடிகள் நீரே அருளுக." எனச் சாத்தனர் மூவேந்தருக்கும் உரியதை-மூவேந்தர் வரலாறு கொண்ட சிலம்பின் கதையை-அம் முடிமன்ன குலத்தில் ஒன்ருகிய சேரர் குலத்தில் தோன்றிய இளங்கோ வடிகள் பாடவேண்டுமென, முதல் தொடக்கத்தை அடி கள் மேலேயே ஏற்றுகின்ருர். ஆம்! சாத்தனர் எளிய புல வர். ஆனல் சிலம்பின் ஆசிரியரோ அரச குடியிற் பிறந்த வர் மட்டுமின்றி அனைவரும் போற்றும் துறவற நெறியை யும் மேற்கொண்டவராக விளங்கினர். எனவே அவர் புது நெறி செல்லின் உலகம் அரச குடும்பத்தவராதலால் பழிக்க அஞ்சும்; அப்படிப் பழிப்பினும் அவர்தம் துறவுள் ளம் அதைப் பழிப்பாகக் கொள்ளாது. இவற்றை எண் ண்ணித்தானே அன்றி ஏனே சாத்தனர் அடிகள்! முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது; அருள்க’ என்ருர். இளங்கோ வடிகளும் சாத்தனர் கூறியதில் உள்ள உண்மையை உணர்ந்து அப்பணியை மேற்கொள்ள முனைந்தாலும் சாத்தனரையும் பிணைத்துச் செல்லவே நினைத்தார். எனவே அவர் சிலம்பினைப் பாடச் சாத்தனர் மேகலையைப் பாட இசைந்தனர். இரண்டாவதாக, தம்மேல் திரும்பக் குற்றம் வரினும் அவ்வளவாகத் தாக்காது என எண்ணியது அவர் உள்ளம், எனவேதான் இருவரும் தனித்தனியாகப் பாட, ஒருவர் பாடியதை மற்றவர் கேட்கவேண்டும் என்ற ஏற் பாட்டில் இருபெருங் காப்பியங்களும் உருவாயின. இந்த உண்மைகளை,