உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. சமயத்தை மட்டும் சாத்தனர் விளக்கிப் பெருமைப்படுத்தி னர் என்ருலும் இழுக்கில்லை; பிற எல்லாச் சமயங்களைப் பற்றியும் தாமே வலிந்து காட்டவந்து, அவைப்பற்றியெல் லாம் கூறி, அவை பிடிக்கவில்லை என ஒதுக்கப்பெற்று, அவை அனைத்திலும் பெளத்தமே சிறந்தது என மணி மேகலை கொண்டாள் எனக் காட்டுவது சிறந்த ஒன்ருகாது. இதுவே மணிமேகலைக் காப்பியம் மக்களிடம் நல்ல இடத்தைப் பெருமைக்கு முக்கிய காரணமாகும். மணி மேகலையில் இலக்கியச் செறிவும் பிற சிறப்பியல்புகளும் அமைந்திருந்த போதிலும் இந்தச் சமயம் காட்டும் செயலே அதன் வாழ்வில் மாசு உண்டாக்கி இருக்க வேண்டும். இந்த நிலை ஒரு சார்பு பற்றித் தோன்றிய எல்லா இலக்கியங்களுக்கும் காணலாம். சேக்கிழார் தம் பெரிய புராணம் சிறந்த இலக்கியம் என்பதை மறுப் பாரிலர். எனினும் அது சைவ சமயத்தைப் பற்றிப் பாராட்டுவதோடு, பிற சமயங்களைப் பழித்துரைக்கின்றமை யின் உலகில் அனைவராலும் ஒருசேரப் போற்றப் பெற வில்லை. சிந்தாமணியும் அப்படியே. சாத்தனரின் சமகாலத் தவராகிய இளங்கோவடிகள் தாம் சைனராக இருந்தும், காவியத் தலைவன் கோவலன் சைனன் எனக் கொள்ளச் சான்றுகள் இருந்தும் தம் நூலில் சைனக் கொள்கையை விளக்கி காட்டும் அளவுக்கு அவர் நின்றரே ஒழியப் பிற சமயங்களைப் பற்றிய ஆய்வு ஒன்றையும் கொண்டு, அவை தேவையற்றவை எனத் தள்ளவில்லை; மாருக, சமுதாயத்தில் ஆங்காங்கே வாழும் மக்கள் வழிபடு தெய்வங்களாகப் போற்றப் பெற்ற, கொற்றவை, திருமால் முருகன் ஆகியோரை வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலியவற்ருல் பாராட்டிப் போற்றுகின் ருர். ஆய்ச்சியர் குரவைப் பாடல்களை நாம் கேட்கும்போது அவற்றைப் பாடியவர் ஆழ்வாருள் ஒருவரோ என எண்ண வேண்டியுள்ளது. எனவேதான் சிலப்பதிகாரம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' எனப் போற்றப் பெற்று வாழ் கின்றது. அத்துணைச் சிறப்பு மணிமேகலைக்கு இல்லை என் ருலும், இதுவும் சமயநெறி மாறுபாடு ஒன்றைத் தவிர்த்து