பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. மற்றைய வகைகள் அனைத்திலும் சமுதாயத்தை நமக்குக் காட்டுகின்றமையின், இதுவும் வாழ்விலக்கியம் என்று போற்றப் பெறும் வகையில் இன்றும் நம்மிடை வாழ்ந்து வருகின்றது. - நூலில் சாத்தனர் தம் மணிமேகலையில் பெளத்த சமய உண்மைகளை நன்கு விளக்குகிருர். புத்த தருமத்தையும் புத்த சங்கத்தையும் பலவிடங்களில் விளக்குகிருர், புத் தரைப் பலவிடங்களில் வாயாரப் புகழ்கின்ருர்; இவையே புத்த சமய அடிப்படைகள் என்பதை நன்கு காட்டுகின் ருர், கொலை செய்யாமை, புலால் மறுத்தல் ஆகிய அறங்களும் காட்டப் பெறுகின்றன. யாகம் செய்யும் கொலைத் தொழி லுக்கு மாருகவேiஒருபுரட்சிச்சமயமாகத்தோன்றிய பெளத் தம் அதேநெறியைத் தமிழ்நாட்டிலும் பரப்பிற்று. அசோகர் காலத்திலும் அதற்குப் பிறகும் புத்த மதம் தமிழ்நாடு, இலங்கை முதலிய நாடுகளில் பரவின போதிலும் பொது மக்கள் சமயமாக அது மாறவில்லை. சாத்தனர் தம் நூல் வழி அதைப் பொதுமக்கள் சமயமாக மாற்றப் பெருந் தொண்டு செய்துள்ளனர். எனினும் கால வெள்ளத்தில் அதன் நிலைகெட அது நாட்டில் இல்லையாயிற்று. வைதிக சமயம் பெளத்த சைனங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் வந்த ஒன்ருயினும் அது சமயத்திடையே கொலைசெய்யும் வேள்வியை இணைத்தமையின் தமிழ் நாட்டில் முதலில் காலூன்றவில்லை. அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பெளத்தம் தமிழ் நாட்டில் கொலைசெய்யாக் கொள்கையை முன்வைத்துத் தன்னை வளர்த்துக்கொண்டது. அப்படியே சைனமும். ஆல்ை ஆரும் நூற்றண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் வைதிக சமயம் தன் அடிப்படைக் கொள்கைகளாகிய கொலை செய்யும் யாகம் சாதிப் பிரிவின் கொடுமை இவைகளை விட்டுத் தமிழ்