பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாட்டுப் பழஞ்சமயங்களாகிய சைவம், வைணவம் ஆகியவற்றின் கொள்கைகளையும் கடவுளர்களையும் தன்ன கத்தே கொண்டு, யாகம் முதலியவற்றைப் பற்றி அவ்வளவாக வற்புறுத்தாது, தம்மொழி முன் உயர்ந்த தெனக் கூறியதை மறுத்துத் தமிழ்மொழிக்கு ஒத்ததே என்று கூறி, எல்லோரும் சமயத் தலைவராகலாம் என்ற நிலையை உண்டாக்கிற்று. அப்பர் போன்றரும் அதல்ை உயர, சம்பந்தர், அப்பூதி போன்ருரும் அவரடி பணியும் நிலையை உண்டாக்கித் தம்மைத் தாழ்த்திக் கொண்டனர். கோயில் அமைத்து அதில் தமிழோடு இசை பாடல் மறந் தறியாத நிலையைக் கண்டனர். எனவே, தமிழ் மக்கள் அந்த வைதிக சமயத்தைச் சார, பெளத்தம் சைனம் இரண்டும் தளர்ந்தன. இத்தகைய புரட்சிகளே மாத்திரமின்றிப், புறத்திலும் புத்தர்களுக்குரிய அரச மரங்களின் கீழ், புத்தர் உருவத்தைப் போன்றே பெரிய பிள்ளையார் உருவத்தை - அந்த ஏழாம் நூற்றண்டில் பரஞ்சோதியார் வாதாபியை வென்று கொண்டுவந்ததை - எல்லா ஊர்களிலும் நிறுவினர். மேலும் பெளத்த சமண சமயத்தவர் பாலி, வடமொழி முதலியவற்றையே பற்றி நிற்க, வைதிக சமயத்தார் தமிழில் தம் வழிபாட்டை மாற்றிக்கொண்டனர். இத்தகைய மாறுபாடுகளால் ஏழாம் நூற்ருண்டில் வைதிகம் வளர்ந்து, இன்றளவும் சிறுசிறு மாற்றங்களோடு வாழ, அப்போது வீழ்ந்த அந்த இரு சமயங்களும் பிறகு தமிழ்நாட்டில் எழுந்து நடமாடவே யில்லை. மற்ருெரு காரணமும் இதற்கு உண்டு. பெளத்தம் சைனம் இரண்டும் தமிழ் மரபுக்கு மாறுபட்ட துறவினை அதிகமாக வற்புறுத்த, சைவரும் வைணவரும் துறவினும் இல்லறமே ஏற்றமெனக் கொண்ட பழந்தமிழ்க் கொள்கை யினையே பின்பற்றி வாழ்ந்தனர். வைதிக சமயமும் இந்த அடிப்படையை உணர்ந்து, துறவுநிலை பற்றிய தன் சமயத்திலுள்ள ஒரு தனிக் கொள்கையை வலியுறுத்தாது, சைவ, வைணவ நெறி பற்றிப் பண்டைத் தமிழ்க்