பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மணிமேகலைக்கு எத்தகைய இடரும் வாராமல் தடுக்க வேண்டும் என்ற நிலையில் மட்டுமன்றி, மணிமேகலையை மணிபல்லவம் தூக்கிச்சென்று, அவளுக்குப் பழம்பிறப்பை உணர்த்தி அமுதசுரபியையும் அளிக்கவேண்டும் என்று மேல்விளை விதிக்கும் வழியாக எண்ணிமிட்டது அது. எனவே சக்கரவாளக் கோட்டத்தில் அவர்கள் உறங்கிய போது, மணிமேகலையைத் தூக்கிக் கொண்டு, விண்வழியே பறந்து தெற்கே 30 யோசனை தூரத்திலுள்ள மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு சேர்த்தது. மணிபல்லவம் எங்கே உள்ளது? "அந்தரம் ஆரு ஆறைந்து யோசனை தென்திசை மருங்கின் சென்று திரையுடுத்த மணிபல் லவத்திடை மணிமேகலா தெய்வம் அணியிழை தன்னை வைத்தகன் றதுதான்'-6/211-214 என்று சாத்தனர் நடந்த நிகழ்ச்சியைக் கூறுகின்ருர். அம் மணிபல்லவம் எங்கே உள்ளது? அல்லது அது வெறும் கற்பனை இடமா? மணிமேகலையில் வரும் பல தீவுகளும் நாடுகளும் கற்பனையில் பிறந்தவை யல்ல. சில அதே பெயர்களோடு இன்றும் உள்ளன. மணிபல்லவம் அதே பெயருடன் நாகத் தீவு' என்ற மற்ருெரு பொயரையும் தாங்கி இன்றும் தமிழர் வாழிடமாக உள்ளதை அறிதல் வேண்டும். அம்மணிபல்லவத்தே தரும பீடிகை உண் டென்றும் பழம்பிறப்பை அது உணர்த்தவல்ல தென்றும் சாத்தனர் கூறுகின்றர். 'அறவோர்க் கமைந்த ஆசனம் என்றே நறுமலரல்லது பிற மலர் சொரியாது பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம் கீழ்கில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னர் ஒரு வழித் தோன்றி எமதி தென்றே எடுக்க லாற்ருர்