பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 தம்பெரும் பற்று நீங்கலு நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து தம்பெரும் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதி தென்றே பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும் பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும பீடிகை" என்று சாத்தனர் காட்டிய இதே வரலாறு அந்தச் சிறுதீவுக் குரிய தலபுராணத்திலும் குறிக்கப் பெறுகின்றது. இன்று அங்கே அந்தப் புத்த பீடிகை இல்லையாயினும், புத்தர் தூபி உயர்ந்ததாக எழுப்பப் பெற அதன் அடியில் புத்தர் அடிச் சுவடு பொதித்த தரும பீடிகை காட்சி தருவதையும் இலங்கையிலுள்ள புத்த சமயத்தவர் பலரும் அத்தீவினுக்கு நாள் தோறும் யாத்திரை செல்வதையும் கண்டுகண்டு மகிழ்ந்தவன் நான். அந்தப் புத்த தூபியின் அருகில்அதைேடு அமைந்த புத்த பீடிகையினையும் சுற்றி அமைந் துள்ள சோலையின் அமைதியினையும் கண்டும் கருதியும்நிற்பின் நம்மை மறந்த நிலையினை நாமடைவோம். மணி மேகலை கண்ட அப்பீடிகைதான் இதுவோ என்ற உணர்வு நமக்குத் தோன்றும் போது நாமும் அந்தப் பெருந்தலைவி யின்வழித் தொண்டரான உணர்வு பிறக்கிறது. அண்மை யில் கோமுகிப் பொய்கை இல்லையாயினும் அது இருந்த இடம் புத்தர் பள்ளம் என்னும் பெயரால் பொட்டலான பள்ளமாக இன்றும் உள்ளது. எனினும் அந்த நிலம் நான் கண்டபோது தனி ஒருவருக்குச் சொந்தமாகி, வேலியிடப் பட்டிருந்தது. அதையும் பொது விடமாக்க வேண்டும் என்று யாத்திரிகர்கள் பேசிக்கொண்டனர். அத் தீவின் ஒரு புறம் இலங்கை வாழ் புத்த மதத் தினரும் பிறநாடுகளின் புத்த சமயத்தவரும் சென்று பீடிகையை வழிபடும் அதே வேளையில், அத்தீவின் கடற் கரையில் அமைந்த நாக கன்னிகை"யின் கோயிலை இலங் கை வாழ் இந்துக்களும் பிறரும் நாள்தொறும் சென்று வழிபடுகின்றனர், தமிழ்நாட்டு அமைப்பிலே அமைந்த 3