உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அக் கோயிலில் தமிழ்நாட்டு மக்களே அர்ச்சகராக அமர்ந்து வழிபாடாற்றுகின்றனர். ஆண்டுதொறும் பெரு விழா நடைபெறுகின்றது. அது காலையில் பல்லோர் கூடி விழா எடுக்கின்றனர். நாக நாட்டிலிருந்து வந்த இருமன்னர் பீடிகைக்காகப் போட்டியிட, பீடிகை தமது என், இடையில் வந்த புத்த சாரணர், அதைத் தமது எனக் கொண்டு சென்றமையின் அந்நாக நாட்டு மன்னர் இருவரும் தம்முள்மாறுபட்டதற்கு கன்னிகையின் உருவமைத்துக் கோயில் கட்டி வழிபட, அது பிறகு பெருங்கோயிலாக அமைந்தது என்பர். மேலும் அந்நாள் முதல் அத் தீவும் நாகத் தீவு என்றே அழைக்கப் பெறுகின்றது. 'மணிபல்லவம்’ என்ற அதன் பண்டைப் பெயர் மெல்ல மறைய நாகத் தீவு என்றே பலருக்கும் இன்று அத்தீவு அறிமுகமாகின்றது. இத் தீவு யாழ்பாணக் கரையிலிருந்து சுமார் 30 கல் தொலைவில் தென்மேற்கில்-புகாருக்கு நேர் தெற்கெனும் படி-சிறு தீவாக ஐந்து கல் சுற்றளவுள்ளதாக அமைந் துள்ளது. அதற்கு நாள்தோறும் சென்று வருவதற்கு வசதி யாக-இருசமயத்தோரும் தூய தலமாக அதைக் கருதி வழிபடச் செல்கின்ற காரணத்தால்-விசைப் படகுகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. அத் தீவிலேயே வசிக்கும் மக்கட்தொகை எண்ணிக்கையில் குறைந்துள்ள தாயினும் நாள்தோறும் இருசமயத்தைச் சார்ந்தவர்களும் பலப்பலராகச் சென்று வழிபாடாற்றி வருகின்றனர். அத் தீவில் கால்வைத்துப் புத்த பீடிகையையும் நாக கன்னிகை யின் நன்றேற்றத்தையும் அவற்றின் இயற்கைச் சூழலையும் கண்டு மகிழ்ந்த யாரும் அந்தத் தீவினை விடுத்துவர மனம் விரும்பார். ஆம்; அத்தகைய இயற்கை எழிலோடு இன்று. அன்று மணிமேகலை பழம்பிறப்புணர்ந்த பண்பார் தீவு. சிறக்கத் தன் தெய்வநலம் கெடாத வகையில் நலமுற்றுநலம் தந்து இன்றும் உயர்ந்துள்ளது.