உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இன்றைக்கு நாற்பதாண்டுகளுக்கு முன் இப் பல்கலைக் கழகத்தே மாணவகைப் பயின்ற நாளில், எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களுள் டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை அவர்கள் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர் கள் வீட்டுப் பிள்ளை எனவே நான் அவர்களாற் போற்றிப் புரக்கப்பெற்றேன். பிறகு அவர்கள் சென்னை வந்த போதும் எங்கள் ஆசிரியர் மாணவர் உறவு தொடர்ந்து இறுதிவரை நிலைத்து நின்றது. இன்று அவர்தம் அன்னை யாரின் நினைவுச் சொற்பொழிவை ஆற்ற, அவர்தம் அடி நினைந்து உங்கள்முன் நிற்கின்றேன். அண்ணுமலைப் பல்கலைக் கழகம் முதன்முதல் எனக் குத் தமிழ் நலம் தந்த கழகம். இன்று நான் அன்னையின் மடியில் தவழும் குழவியின் உணர்விலேயே சொற்பொழி வினை ஆற்றுகின்றேன். சனவரி 29, 30 31 (1972) ஆகிய மூன்று நாட்களையும் ஈண்டு அமைத்துக் கொண்டேன். உலகம் நலமுற்று வாழ அறமாற்றி, அவ்வுலகை ஆற்றுப்படுத்திய, 2000 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த மணிமேகலையின் வாழ்வை அடிப் படையாகக் கொண்ட இச் சொற்பொழிவுகள், அதே அடிப்படை அறத்துக்காக உலகில் நம் தலைமுறையில்நூற்ருண்டில்-வாழ்ந்த அண்ணல் காந்தி அடிகள் மறைந்த சனவரி 30 நாளினும் அதற்கு முன்னும் பின்னும் அமையும் நிலையில் அமைந்துள்ளன. எனவே சமுதாயம் என்றும் அடிப்படை அறத்தினின்றும் திறம்ப வில்லை என்ற உணர்வு அரும்புகிறது. பேசப்போகும் மூன்று தலைப்புக்களுள் நான் எல்லா வற்றையும் ஆய்ந்துவிட்டேன் என்றே பொருள்களை வரையறுத்து முடிவு செய்துவிட்டேன் என்ருே கூற முடி