பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.58 இச் சம்பாதி சடாயு உடன் பிறந்த கழுகு வேந்தன் என்ற உண்மையைக் கம்பர், சடாயு வாக்காகவே, இமையா ரோடும் வருணங்கள் விரிகின்ற காலத்தே வந்துதித்தேன் கழுகின் to 60s 65 6's தருணங்கொள் பேரொளியீர் சம்பாதி பின்பிறந்த சடாயு என்ருன்' - ஆரணிய, சடாயுகாண் படலம் 25 எனக் காட்டுவர். எனவே சம்பாதி, சடாயு என்பார் இருவரும் மிகப் பழங்காலத்தே தோன்றியவர் என்பதும் இராமாயணக் காலத்தில் எங்கோ வடக்கே இருந்தவர் என்பதும் அவர்கள் ஒரு காலத்தில் இறைவனை வழிபட்ட இடமே இன்று வைதீசுவரன் கோயில்” என வழங்கும் புள்ளிருக்கு வேளுர்’ எனப் பெயர் பெற்றது என்பதும் அறியக்கிடக்கின்றன. புகார் நகரம் அன்று பரந்து விரிந்து இருந்தமையின் அதன் சுற்றிலும் இன்றுள்ள பல ஊர்கள் அன்று அப்பெருநகர் எல்லைக் குட்பட்டனவாக இருத்தல் வேண்டும். இன்றைய பரந்த சென்னையில் பல சிற்றுார்கள் அடங்கியுள்ளமையே இதற்குச் சான்ருகும். அன்றைய விரிந்த பூம்புகாரின் எல்லையில் சம்பாதி வனமாகிய புள்ளிருக்கு வேளுரும் சண்பை என்னும் சீகாழியும் மயிலாடுதுறையாகிய மாயூரமும் அடங்கிக்கிடத்தன என்பது பொருந்தும். சிலம்பில் கண்ண கியொடு இருந்த தேவந்தி, துயர் நீங்குவதற்கு வழிகாட்ட வருவளாய், "கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின்புறுவர் உலகத்து' 9/57 – 6t