பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 என்று காட்டப்பெற்ற இரு குளங்களே இன்றளவும் அதே எல்லையில் திருவெண்காட்டில் அதே பெயர்களோடு சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என்ற பெயர்களோடு இருப்பதை அறிகிருேம், அவற்றுடன் அக்கினி தீர்த்தம் ஒன்றையும் சேர்த்துக் கணவரொடு இன்புறுவது மட்டுமன்றி, அவர் வழியே கான் முளைகளையும் பெறக்கூடும் என்ற உண்மை யையும் உணர்த்தப் பின் வந்த திருஞானசம்பந்தர், 'பேயடையா பிரிவெய்தும் பிள்ளையிைெடு உள்ள கினை வாயின்வே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’ -சம். வெண்-2 என்று காட்டுவர். எனவே தேவந்தி கூறிய அந்தக் கோட்டமே இன்று வெண்காடாக விளங்குகின்றது. இவ்வாறு பரந்த புகாரில் இருந்த ஊர்கள் அனைத்தும் உள்ளடங்க, அப்பெருநகர் விரிந்த நிலையில் சிறந்த ஒன்ருகப் பல்வேறு காரணங்களால் பல்வேறுவகைப் பெயர்களைப் பெற்றுச் சிறந்ததொடு, பல்வேறு வனங்களை யும் பல்வேறு கோட்டங்களையும் பெற்றுச் சிறந்திருந்தது எனவும் அறிகின்ருேம். பல்வகை வனங்கள் பூம்புகார் நெருங்கிய மக்கள் கூட்டத்தொடு பொருந் திய பெருநகராக மட்டும் இல்லை என்பதும் அப்பேரூரின் நடுநடுவே இதய வெளிகளெனப் பல வனங்கள் இருந்தன என்பதும் அறியக்கிடக்கின்றன. சுதமதி மணிமேகலைக்குக் கூறிய வகையில் அவர்கள் உறையும் இடத்துக்கு அருகிலேயே ஐந்து பெரு வனங்கள் இருந்தன என்று குறிக்கின்ருர் சாத்தனர். இலவந்திகை வனம், உய்யான வனம், சம்பாதி வனம், கவேர வனம், உவவனம் என அவை அழைக்கப்பெற்றன என்பதை மலர்வனம் புக்க காதை வழியே (44-61) நன்கு அறிகின்ருேம். அவற்றுள்