பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66, உணவு முதல் அடிப்படைத் தேவையாக அமைய அடுத்து உடையைக் காட்டி, மூன்ருவதாகவே உறையு ளைக் காட்டுகிருர். இம் மூன்றும் உயிர்வாழ்க்கைக்கு இன்றி யமையாதனவே. எறும்பிற்குப் புற்றும் ஈசலுக்கு மண் னும் பறவைக்குக் கூடும் மனிதனுக்குக் குடிலும் தேவை தானே. அப்படியே உடுக்கவேண்டிய மனிதனுக்கு உடை இரண்டாவதாக அமைகிறது. உறையுள் மூன்ருவதாக உள்ளது. இந்த முறையினை நாடாளும் நல்லவர் எண்ணிச் செயலாற்ற வேண்டுமெனத் திட்டமாகச் சாத்தனர் காட் டிச்செல்கிறர். இவ்வரச முறைபற்றிப் பின்னர் மேலும் காண்போம். - வஞ்சியில் பலவடிகளாலாகிய சில காதைகளால் இளங்கோவடிகள் கூறிய செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பைச் சாத்தனர் சிலவடிகளாலேயே நமக்குத் தெளிய வைக் கிருர்,வஞ்சிமாநகர எல்லையில்-புறஞ்சேரியில் நல்லவர்கள் தங்கி இருக்கும் செம்மையைச் சாத்தனர், 'நற்றவ முனிவரும் கற்றடங் கினரும் நன்னெறி கானிய தொன்னூற் புலவரும் எங்கணும் விளங்கிய எயிற்புற இருக்கை" -26/74-76 எனக் காட்டுவர், நகர்ப்புறங்களிலே புறஞ்சேரியில் இத்த கைய அறிவோரும் அறிஞரும் தங்கியிருத்தல் மரபு போலும். 'அறத்துறை மாக்கட்கு அல்லது இந்தப் புறஞ்சிறை இருக்கை பொருந்தாது” -சிலம்பு 15/107.108 என இளங்கோவடிகளும் இவ்வுண்மையை வற்புறுத்து கின்ரு ரன்ருே: அகநகரிலே எல்லா மக்களும் கலந்துறை யும் நிலையிலே, நகர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் அற வோரும் புலவரும் முனிவரும் மூதறிஞரும் தம்முட் கலந்து