பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£78 டாகக் காட்டிக்கொண்டு, இல்லாதவரும் உள்ளவர் போன்று நடிக்கின்றனர். வாழ்க்கையே நடிப்போ என்னு மாறு சில ஆடவரும் பெண்டிரும் பல்வேறு அழகுப் பொருள்களை அணிந்தும் பூசியும் சூடியும் உடுத்தும் பிறர் கண்டு மகிழ வாழ்கின்றனர் என்பது உண்மையாயினும்: அவ்வாழ்வில் தன்னைக் கண்டு தன் கணவனேயன்றி வேருெரு ஆடவன் விரும்பி நெருங்குவானுயின் அவனை எந்தக் குலமகளும் ஏற்கமாட்டாள் என்பது உறுதி. சிலம் பில் வெளியே சென்ற தம் கணவர் வரும்வரையில் கல்லாக இருந்தும், குரங்கு முகம் பெற்றும் தம்மைப் பிறர் விரும் பாத வகையில் பாதுக்காத்துக்கொண்ட கற்பு நெறியினைக் காண்கிருேம். ஆனல் இன்றைய நாகரிகச் சூழலில் புற அழகால் தம்மை மற்றவர் கண்டு மதிக்கும் வண்ணம் அழகுபடுத்திக் கொண்டாலும் அக அழகில் மாசற்று இருப்பவரைக் காண முடிகிறது. இந்த வகைக்குச் சில விதி விலக்குகள் இருக்கலாம். அவர்களை யாரோ என ஒதுக்கித் தள்ளி மேலே சொல்லலாம். மணிமேகலை காலத் தில் இவ்வாறு பிறர் தம்மைக் கண்டு விரும்பும் வகையில் தம்மை அழகுபடுத்திக் கெள்வார், கற்புநெறி பிறழ்ந்தவ ராக வேண்டும் என்கிருர் சாத்தனர். இந்தப் புரட்சி யாரும் செய்யாத ஒன்று. 'மணிடிணி ஞாலத்து மழைவளம் தருஉம் பெண்டி ராயின் பிறர் நெஞ்சு புகாரே' –22/44-45 பூம்காரில் வாழ்ந்த மருதியின் வரலாற்றில் இவ்வுண்மை யை அரசனுக்கு முனிவர் உணர்த்து முகத்தான், சாத்தனர் உணர்த்துகிருர். காவிரி ஆடிவரும் மருதியைக் சுகந்தன் என்னும் மன்னன் மகன் நீ வா’ என அழைக்கிருன். அவள் அஞ்சி ஒதுங்கி, அருகில் உள்ள பூத சதுக்கத்துள் புகுந்து அலமந்து ஆண்டுள்ள தெய்வத்தைக் கண்டு தான் தவருதிருந்தும் தன் கற்பு மாசுபட நேர்ந்த காரணத்தைக் கேட்கிருள். எனவே மற்றவன் கண்டு தன்னை விரும்பிய அளவிலேயே தன் கற்பு கெட்டதென அவள் கருதுகிருள். அதற்குத் தெய்வம்,