பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 'இம்மைப் பிறப்பில் பிரியல மென்றேளுக் கண்ணிறை நீர்கொண் டனள்' குறள்-1315 என்று அவர் பிறவிதொறும் என்றென்றும் பிரியாது. இணைந்த வாழ்வையே வற்புறுத்துகிருர். ஆனல் சாத்தனர் இவற்றிற் கொல்லாம் ஒரு படி மேலே சென்று 'கற்பு என்ற சொல்லுக்கே புது விளக்கம் தருகிருர், எது கற்பு? - - தன் கணவனைத் தவிர்த்து வேறு ஒருவரை நினைக்கா திருப்பது மட்டும் பெண்களுக்குக் கற்பாகாது; தன்னைப் பிறர் நினைக்காத வகையில் நடந்து கொள்வதுவே சிறந்த கற்பு என்று பேசப் பெறுகின்றது. இந்த உயர்ந்த நிலை எல்லோராலும் பின்பற்ற முடியாத ஒன்று என்ருலும் இது உயர்ந்த குறிக்கோளாகும் என்பதை மறுக்க முடி யாதன்ருே. இந்த மரபில் உற்று நோக்கின் நமது புராண இதிகாசங்களில் வரும் எத்தனையோ கற்புக்கரசிகள் யாவரும் எண்ணத்தக் கவர்க ளாகின்றனர். எனவே சிலர் இதை ஏற்றுக்கொள்ள விரும்பார் ஆயினும் இது தமிழ் மர பின் சிறந்த ஒன்ருகப் போற்றப் பெறுகின்றது. 'குலமகள்", விலைமகள் ஆகிய இருவரைப் பற்றி விளக்கிக் காட்ட வந்த ஒளவையார் தம் கொன்றைவேந்தனில், "குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்' என்றும். "விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்' என்றும் கூறுகிறர். இந்த அடிப்படையில் நாம் வாழ் கின்ருேமோ என்பது ஐயத்துக்கு உரிய ஒன்ருயினும் எந்தக் குலமகளும் தன் கணவனைத் தவிர, பிறரால் விரும் பத்தக்க வகையில் நடந்து கொள்ள மாட்டாள் என்பது உறுதி. இன்றைய நாகரிக வாழ்க்கையில் வீட்டில் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தாலும் வெளியே போகும் போது பகட்டாகச் செல்லவேண்டுமென ஆடவர் மகளிர் இருவருமே விரும்புகின்றனர். வெளியில் தங்களைப் பகட்