பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 யாக்கை இழிநிலை காட்டி, காம மயக்கம் நீங்கச் சொல்லு கிருர் சாத்தனர். வேறு எந்தப் புலவரும் இப்படி ஒர் இளம்பெண் வாயிலாகவே, அதே பெண்ணின் இழிநிலை காட்டித் துறவை வற்புறுத்தும் இலக்கியம் எந்த மொழி யிலும் பாடி இரார் என்பது திண்ணம். சாத்தனர் சார்ந்த புத்த சமயத்து இலக்கியங்களிலேயும் இத்தகைய புரட்சி யை வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள் என்பதும் உறுதி. எனவே, இத்தகைய மாறுபட்ட புரட்சி செய்த சாத்தனர் போற்றற் குரியரல்லரோ! கற்பியல் புரட்சி "கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை" என்பது ஒளவை வாக்கு, மணம் புரிந்துகொண்ட இரு வரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியா நிலையில் வாக்கினைக் காப்பாற்றி, என்றென்றும் இணைந்து நிற்பதே அது.மேலும் தான் கொண்ட கணவனையன்றி வேறு ஒருவரை நாடாத உள்ளத்தோடு இருப்பதே கற்பு என்று பலரும் காட்டுவர். பாரதியார் அந்த உண்மை நிலையினை ஆடவர் மேலும் ஏற்றி, "கற்புநிலை என்று சொல்லவந்தார் - இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம் எய்ப்பும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காண் என்று கொம்மியடி’ எனக்காட்டி, அக்கற்பு ஆடவர் பெண்டிர் இருவருக்கும் உரிய ஒன்று எனக்காட்டுவர். அஃதாவது, கொண்டவளை விட்டு வேறெருத்தியை நினையாது ஆடவனும், கொண்ட வனை விட்டுவேருெவனை நினையாது மகளும் வாழவேண்டும் என்பது உலக நியதி. இதைத்தான் எல்லாப் புலவர்களும் கொள்ளுகின்றனர். சில நாட்டு மக்கள் இந்த அடிப்படை கூட உணரமுடியாமல் மனம் போன போக்கில் போகின்ற னர். வள்ளுவர் இக்கற்பு நிலையினை ஒரு பிறவியோடு நிறுத்திவிடாது என்றென்றும் எடுக்கும் பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் ஒரு பெரு நெறியாகக் காட்டுவர்.