பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வெட்டிய ஊழ்வினை பற்றும் எனக் காட்டுகிருர். ஆக, ஒரு வர் தம் ஊழ்வினை காரணமாகப் பெறும் எச்செயலும் அச்செயலைச் செய்வோனுக்கும் பயன்தரும் என்ற புது விதியை-அதுவரை யாரும் சொல்லாத விதியைச் சாத் தனர் சொல்லுகிருர். ஊழ்வினை வந்திங் குதய குமரனை ஆருயிர் உண்டது ஆயினு மறியாய் வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும்’-20/123-126 என்று காட்டுகிருர். இதே அடிப்படையில்தான், இளங்கோ வடிகள் கூருது விட்டபோதிலும் கண்ணகிக்கு, மதுரையை எரித்த காரணத்தால், மறுபிறப்புக்கள் பல உள என இவர் காட்டுகிருர். எனவே, வினையின் வலிமை இளங்கோ வடிகளைக் காட்டிலும் சாத்தனரால் நன்கு விளக்கிக் காட் டப் பெறுகின்றது. இல்லறச் சிறப்பு புத்த சமயத்தையும் துறவறத்தையும் வற்புறுத்துகிருச் என்ற கூற்றினை மறுத்துச் சாத்தனர், நாமெல்லோரும் மேற்கொள்ளும் இல்லற வாழ்வின் ஏற்றத்தையும் பாராட்டுகிருர், நாம் மேலே கண்ட கற்புநெறி அந்த அடிப்படையில் அமைவதேயாம். அக்கற்பில் வரும் இல்லற நெறி நிற்கும் நல்ல மகளிரால்தான் வையம் தழைக்கும் என்ற நம்பிக்கை உடையவர் சாத்தனர். அதனாலேயே துறவியாகிய மணிமேகலை அமுதசுரபியால் தன் பணியைத் தொடக்க, இல்லற நெறிபற்றி வாழும் கற்புடையளாம் ஆதிரை நல்லாள் முன்சென்று நிற்கிருள். விசாகையின் வரலாற்றைக் கூறுகையில், 'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் புத்தேள் உலகம் புகார்' –22/117–118 என்று திட்டமாக இல்லற வாழ்வு அற்றவர் இம்மை மறுமைப் பயன்கள் அற்றவரே எனக் காட்டுகிருர், 6