பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இவ்வுடம்பும் உயிரும் கொள்ளும் தொடர்பினையும் ஒன்றை விட்டு ஒன்று பறக்கும் நிலையினையும் மற்றேரிடத் தில் மணிமேகலை வாககாலேயே விளக்கி, அந்த உண்மை யின் அடிப்படையில் எல்லா உயிரையும் ஒத்து நோக்க வேண்டும் என்ற பேருண்மையினையும் சுட்டுகிரு.ர். தன் மகன் இறந்த நிலையை எண்ணித் தனக்குத் தீங்கிழைத்த அரசமாதேவியை நோக்கி, "உடற்கழு தனையோ உயிர்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே? உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயற்பாட்டு வினையால் தெரிந்துணர் வரிது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்” 23/73-79 என்று மணிமேகலை பேசுவதைக் காட்டுகிருர் சாத்தனர். நாம் கடிய வேண்டுவன சமய நெறியை வற்புறுத்துகின்றவர் எனினும் சமுதாய நெறியில் மக்களை மாக்களாக்கும் கொடுமைகளை எண்ணிப் பார்க்கத் தவறவில்லை சாத்தனர். அறநெறியை இடைக் காலத்தவர் சமய நெறியொடு பின்னிப் பிணைத் தமை போன்றே சாத்தனரும் செய்கின்றர். எனினும், சில விடங்களில் சங்க இலக்கியங்களை ஒட்டியும் வள்ளுவர் குறளை ஒட்டியும் அறத்தைத் தனிப்படுத்தியும் காட்டு கின் ருர், நல்வினை, தீவினை இரண்டையும் பாகுபடுத்தி ஒன்றைக் கொண்டு மற்றதைத் தள்ளி நாம் வாழ வேண்டும் என வற்புறுத்துகிருர். அறவண வடிகளாம் பெரியார் வாக்காலேயே இந்த நல்வினை தீவினை இரண்டி னையும் காட்டுகிரு.ர். 'தீவினை என்பது யானெ வினவின் ஆய்தொடி கல்லாய்! ஆங்கது கேளாய்! கொலையே களவே காமத்தீ விழைவு உடலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்