பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று உள்ளந் தன்னில் உதிப்பன மூன்றுமெனப் பத்து வகையால் பயன்தெரி புலவர் இத்திறம் படரார்' –24/123-132 என வள்ளுவர் அடியொற்றி, புலவர் காட்டிய வாழ்வறத் தில் நீக்க வேண்டிய தீவினைகள் இவை என்றும், உளம், உரை, உடம்பு ஆகியவை பற்றி இவை தோன்றுவதல்ை இம்மூன்றையும் கட்டிக் காக்க வேண்டுமெனவும் சாத்தனர் நமக்கு அறத்தைச் சுட்டுகிறர். இதை காப் பாரே உயர்திணையாகிய மக்களாவார். அல்லார் மாக்களா வார் என்ற தொல்காப்பிய நெறியை நினைத்து, அடுத்து நல்வினையைக் காட்ட வந்த சாத்தனர், 'கல்வினை என்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைகின்று மேலென வகுத்த ஒருமுன்று திறத்து தேவரும் மக்களும் பிரிமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்' -24/135-140 என்கின்ருர். மேலும் இவற்ருல் விளைவனவும் இவற்றுக்கு மூலமாக நிற்பனவுமாகிய ஐவகைக் கொடுமைகளையும் அவற்றை நீக்க வேண்டிய நிலையினையும் சாத்தனர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 'முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில் கடியப் பட்டன ஐந்துள அவற்றில் கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம்' -22/169-172 என்கின்ருர்,