பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) எழுத்து வருத்தனம் 539

பூ மேகம், லோக மேகம் என்று தனித்தனி கூட்டுக. பூவைச் சொரியும் மேகம் புட்கலாவருத்தம் என்றும் பொன்னைச் சொரியும் மேகம் சங்காரித்தம் என்றும் கூறப்படும். மணத்தல் கலத்தல். பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்குதற்கும், திருநீறு. புனைதல் குற்றம் நீங்கிப் பரிசுத்தமடைவதற்குமாம். பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவற்குப் பாங்கி வாயின்மறுத்துரைத்த தாம் இச்செய்யுள். .

மேற்கூறிய மூன்று உதாரணச் செய்யுட்களும் இறுதியிலே தொடங்கிப் படிக்கும்போதும், முதற்கணின்று படிக்க முடிந்தது போல முடியுமாறு நோக்குக.

5. எழுத்து வருத்தனம்

எழுத்து வருத்தனமாவது, யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு மொழியை எடுத்துக்கொண்டு அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள்படுமாறு எழுத் - துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பதாகும். வர்த்த னம் - வளர்த்தல். இதற்கு உதாரணம் :

ஏந்திய வெண்படையும் முன்னா ளெடுத்ததுவும் பூந்துகிலு மாலுந்தி பூத்ததுவும்-வாய்ந்த வுலைவி லெழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத் தலைமலைபொன் றமரையென் றாம். (எ)

இதன் பொருள்:-மால் - திருமால், ஏந்திய வெண்மை படையும் - கையிலேந்திய படைக்கலமாகிய வெள்ளிய சங்கும், முன் நாள் எடுத்ததுவும் . முற்காலத்தில் (இந்திரன் பொழிந்த மழையைத் தடுக்க) மேலே குடையாக உயரத் தூக்கிப் பிடித்த தும், பூ துகிலும் அழகிய ஆடையும், உந்தி பூத்ததுவும் . நாபி யில் மலர்வித்ததும் (என்ற இவற்றில்), வாய்ந்த-பொருந்திய, உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றா சேர்க்க குற்றமற்ற எழுத்துக்களை முறையே ஒன்றன்மேலொன்றாகச் சேர்க்க, (அது) தலை மலை பொன். தாமரை என்று ஆம்-தலை, மலை, பொன், தாமரை என்று பொருள்படுவதாகும் (எ. று.) -

திருமால் ஏந்திய வெண்படை சங்கு; அது'கம்பு; அதி னின்றும் எடுத்துக்கொண்டது. கம்; இதன் பொருள் தலை. இதனுடன் ந என்னும் எழுத்தை முன்பு சேர்க்க நகம் என்