பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 வி.கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

றாகும்; இதன் பொருள் மலை. இனி இதனுடன்க என்ற எழுத்தைச் சேர்க்கக் கநகம் என்றாகிப் பொன் என்று பொருள்படும். முடிவில் இக்கநகம் என்னுஞ் சொற்கு முன்பு 'கோ' என்ற எழுத்தைச் சேர்க்கக் கோகநகம் என்றாகித் தாமரை என்று பொருள்படுவது காண்க. கம், நகம், கநகம், கோகநகம் என்று எழுத்து வருக்கனமானதுங் காண்க.

6. நாக பந்தம் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் புணர்ந்து விளையாடு வனபோலச் சித்திரம் வரைந்து உபதேச முறைப்படி அப்பாம் புருவங்களில் கணக்கிட்ட அறைகள் வகுத்துச் சக்திகளில் நின்ற அறைகளிற் பொதுவாக எழுத்துக்களமைய ஒரே எண்ணிக்கை கொண்ட எழுத்துக்களாலான கவிகள் சித்திரத்திற் பொருந்தப் பாடுவது நாக பந்தமாம். இங்ஙனமமைக்குங்கால் கவிகளின் மொத்த எழுத்துக்கள் சித்திரத்திற் சுருங்கித் தோன்றும். இச் சித்திர கவியில் இரட்டை நாக. பந்தம், அஷ்ட நாக பந்தம் முதலிய சில வகைகளுமுண்டு. இரட்டை நாக பந்தத்திற்கு இலக்கணம் பின் வரும் வெண்பாவானுணரலாம் : -

வாலுளிருமூன்றும் தலையி லிரண்டெழுத்தும் மூலைக ணான்கும் வயிறிரண்டும் ஐவைந்தாய் நாலெட்டு நாலைந்தே ழாகி நடைபெறுமே சேலிட்ட கண்ணரவின் சீர்.” இதற்கு உதாரணம் பின் வருமாறு:

1. " அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர்

தெருளின் மருவாச்சீர்ச் சீரே- பொருவிலா

வொன்றே யுமையா ளுடனே யுருத்தரு

குன்றே தெருள வருள்: (அ)

எனவும்:

2. மருவி.னவருளத்தே வாழ்சுடராய் நஞ்சு

பெருகொளியான் மேயபெருஞ் சோதித்-திருநிலா வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த மயருமளவை யொழி.” (௯) எனவும் வரும்