பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

செந்தமிழ் பெட்டகம்



கூட்டுறவொழுக்க வகை புறத்திணையாகும் பால் பற்றிய அக ஒழுக்கம் காதல் கண்ணியதாதலால் காதலர் கூட்டமும் பிரிவும், நாட்டமும் வாட்டமும், இணக்கமும் பிணக்கமும், ஏனைய விளைவும், மறைவில் தொடங்கி நிறையால் மணந்து தொடரும் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கமும் அவ்வொழுக்கிற்கு இயல்பாம் உள்ளத்து உணர்வும், கருதாதியல்பில் உடலில் நிகழும் மெய்ப்பாட்டு வகையும் அகத்திணையாகும் பண்டை மக்கள் கண்ட கூட்டுறவெல்லாம் அண்டலும் சண்டையும் நேரிய உறவும் போரின் முறைகளும் ஆகும். அவை புறத்திணை வகைகளாகும் இருதிணை வகைகளும் பொருளின் தொகையாம் இதுவே பொருட்பாலின் சிறப்புப் பகுதி.

இனி, அப்பொருளைப் பேசும் செய்யுள் அல்லது சொற்றொடை யாப்பு மரபுகளைச் சுருக்கி, உவமம், செய்யுள், மரபு என வகுத்து விளக்கி முடிக்கும் இந்நூல்; அதாவது அணி, யாப்பு, வழக்கு வகைகளாம் யாப்பு அல்லது செய்யுள் என்பது பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என ஏழு வகையாகும் செய்யுளைப் பாட்டென்பது பிற்கால வழக்கு அதனால், இலக்கியம் என ஒரு புதுச்சொல் ஆட்சி எழுவதாயிற்று

உரையும், பாட்டும், பிசியும் எல்லாம் செய்யுளின் வகைகள் என்று தொல்காப்பியர் தெளிவுறுத்தியும், பின்னோரதனைப் போற்றாது மறந்து, மரபிறக்கத் தமிழ்ப் பழஞ் சொல்லையும் துறந்ததார் ஒசையும் துக்கும் கருதிப் பாட்டுக்குச் சிறப்பாக எழுத்தால் அசையும், அசைகளால் சீரும், சீரால் தளையும் வரையறை செய்தார் சீரொடு தளையால் பாவகை நான்காய், அடி யளவாக்கம், முடிவின் முறையொடு, பொருள்கோள் வகையும், மரபும் பிறவும் மயக்கற விளக்கிப் பொருட்பாலோடு நூல் முடிந்துள்ளது