பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

165


இடையிற் சிற்சில பிறரால் பிந்திப் புகுத்தவும் பெற்றுள தொழிலான்றி பிறப்பால் பிளவாம் சாதி வகைகள் நுழைக்கப்பட்ட நூதன விதிகள் என்பது முன்பின் சூத்திர முறையொடு பொருந்தா வெறிப்பால் எளிதில் விளங்கும் விலங்கின் மரபுகளுக்குப் பின்னும் தாவர வழக்குகளுக்கு முன்னும் இயல் தொடர்பின்றி மரபியல் 70 முதல் 84 முடிய உள்ள சூத்திரங்கள் அக்காலத் தமிழ கத்தில்லாத சாதி வகை வழக்கங்களைக் குறிப்பது வைப்பு வரிசை முறையொடு முரணும் தப்புச் செருகலென்பது தேற்றம்

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்பது, காலத்தால் தொல்காப்பியரை அடுத்து, மற்றச் சங்கப் பாட்டுக்கள் அனைத்துக்கு முன் அதனை எடுத்தாளும்படி குறைந்தது 25 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சிறந்த வள்ளுவர் குறளும், அக்காலத் தமிழர் வழக்கை வற்புறுத்துவதாலும், அதற்குப் பல நூற்றாண்டு முந்திய,தொல்காப்பியர் சொல்லாத இடைச் செருகல் இச்சாதி பேத சூத்திரங்கள் என்பது வலியுறும்

இக்கட்டுரையின் முதலிற் சொன்னது போலவே, முடிவிலும் தொல்காப்பியர் நூல் தொன்மையாலும், நூற்பொருட் சிறப்பின் நன்மையாலும் முதலிடம் பெறுதற்குரிய தென்பதை யாரும் மறுக்கவும் மறக்கவும் இயலாது.

தொல்காப்பியனார்

தொல்காப்பியம் என்பது இலக்கண நூலின் ஆசிரியர் பண்டைத் தமிழ்ப் புலவர்களின் வரலா போலவே இவருடைய வரலாறுந்தெரியாத நிலையிலுள்ளது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிய மென்று பெயர்பெற்ற தென்பார் பலர் தொல்கர்ப்பியர் என்னும் நூலைக் கொண்டே தொல்காப்பியம் என்று பெயர் வந்திருக்க வேண்டு மென்பர் சிலர் தொல்காப்பி-