பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

செந்தமிழ் பெட்டகம்

யத்தின் சிறப்புப்பாயிரத்திலே ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பதற்கு உரையாசிரியர் இளம்பூரணர், ‘பழைய காப்பியக் குடியிலுள்ளோன் என்று தன் பெயரைத் தோற்றுவித்து’ என்று உரை கூறுகிறார் இங்குக் காப்பியக் குடி என்பது எதைக் குறிக்கிறதென்று தெரியவில்லை சிலர் கவியின் மரபு என்னும் பொருள் கொண்டு கவி சுக்கிரனைக் குறிக்கிறதென்று குறிக்கறிதென்றும், சுக்கிரனுடைய மரபிலே தோன்றியவரென்பது தத்திதாந்த நாமம் என்றும் கூறுவர் காப்பியக்குடி தமிழ்நாட்டிலுள்ள ஒருராக இருக்கலாமோ என்பதும் நினைத்தற்குரியது

இப்போது தொல்காப்பியரைப் பற்றி வழங்குங் கதைக்குத் தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற் பாயிர உரையிலே நச்சினார்க்கினியர் கூறியுள்ளதே ஆதாரமாகும் அக்கதையில் இவர் ஜமதக்கினியின் மகனா ரென்றும், திரணதுரமாக்கினி என்பது இவரியற் பெயரென்றும் அறிகின்றோம் ஜமதக்கினியின் பிள்ளைகளில் இப்பெயருடன் எவரும் இருந்ததாக ஜமதக்கினியின் கதையிலோ, அவர் மகனரான பரசுராமர் கதையிலோ எங்கும் இல்லை மற்றும் தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியர் துவாரகையிலிருந்த நிலங்கடந்த நெடுமுடியண்ணலெனப்பெறும்

கண்ணன் மரபினரான வேளிரை அழைத்து வந்தார் என்று நச்சினார்கினியரே கூறுகிறார் அவ்வாறாயின், பாரத காலத்திற்குப் பின்னிருந்த வேளிரை அழைத்து வந்த அகத்தியர்க்குப் பாரத காலத்திற்குப் பின்னிருந்த வேளிரை யழைத்து வந்த அகத்தியர்க்குப் பாரத காலத்திற்கு முன்னிருந்த இராமன் காலத்தவரான பரசுராமரின் உடன் பிறந்த திரணதுரமாக்கினி மாண வராலு தெப்படி? இவை போன்ற ஐயங்கள் பல அக்கதையிலிருப்ப்தால் இக்கதை ஆராய்ச்சிக்குப் பொருந்துவதன்று