பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

169


பதிற்றுப்பற்று
ஒருபார்வை


ங்க நூல்களுள் எட்டுத்தொகை எனப்படும் தொகுதியில் ஒரு நூல், இதில் உள்ள நூறு பாட்டுக்கள் பத்துப் பத்துக்களாகத் தொகுக்கப்பட்டிருப்பதால் இது பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றுள்ளது. இதன் நான்காம் பத்தில் உள்ள பாட்டுக்கள் மட்டில் அந்தாதி முறையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலிலுள்ள பாட்டுக்கள் யாவும் தொகுத்தோரால் துறை, வண்ணம், நூக்கு, பெயர் என்ற பாட்டியற் கூறுகள் வகுக்கப்பட்டுள்ளன

இந்நூல் முழுதும் தமிழ் மூவேந்தருள் சேர மன்னர்களின் செயல் நலங்களை மட்டும் வரைந்து கூறுகிறது இந்நூலில் முதற்பத்தும் பத்தாம்பத்தும் இதுவரையில் கிடைக்கவில்லை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பாத்து ஈறாகவுள்ள எட்டுப் பத்துக்களே இப்போது கிடைத்துள்ளன. ஒவ்வொரு பத்துக்கும் இறுதியிற் பதிகம் ஒன்று காணப் படுகிறது. இப்பதிகங் கள் மூல ஏடுகளில் காணப்படாமையால், இதன் தொகுப் பாசிரியருக்குப் பின்னே வந்த சான்றோ ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுளது.

இப்போது கிடைத்துள்ள இப்பதிற்றுப்பத்தில் இசர வேந்தர்களில் எட்டு வேந்தர்கள் காணப்படுகின்றனர்.