பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

செந்தமிழ் பெட்டகம்

பெருமைப்படுத்துகின்றார் இத்தன்மை இந்நூலின் சிறப்புப் பண்பாக உள்ளது

நிலையாமையை வற்புறுத்தும் ஆசிரியர் அறத்தினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத் தன்மையினையும் தெளிவுபடுத்தியுள்ளார் (6 97-104) சுதமதி மணிமேகலையைத் தொடர்ந்து வந்த உதயகுமாரனுக்குக் கூறுவதாக ஆசிரியர் அமைக்கும் அறிவுரைப் பகுதி (4:107.121) திட்ட நுட்பங்களோடு சிறந்து விளங்குகின்றது சோழர் பரம்பரையில் பிறந்த மற்றொரு மன்னன், சிறுவனாக இருந்த காலத்துச் செய்த அரிய நிகழ்ச்சிகளை நினைப்பூட்டி, மன்னன் மகன் நெஞ்சில் நாணம் ஊட்டுவதும், பசுமரத்தானிபோல் உள்ளத்தில் அமையுமாறு உடல் நிலையாமையை வற்புறுத்துவதும் அறிந்துகொள்ளற்குரியன இவ்வாறே மணிமேகலா தெய்வத்தின் கூற்றாக அமைந்த பகுதி அரசியல் அறிவை விளக்கும் வகையில் இன்பம் ஊட்டுவது

       “கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்,
       கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்;
       மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை,
       மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன்
       தன்னுயிரென்னும் தகுதியின் றாகும்” (7: 8-12)

என்பது அப்பகுதி

மணிமேகலை உதயகுமாரன் இறந்ததும் சிறை செய்யப்படுகின்றாள் மகனையிழந்த இராசமாதேவி வஞ்சனையால் பல இன்னல்களை மணிமேகலைக்கு விளைவிக்கின்றாள் அவ்வகையில் மணிமேகலையின் பெருமையினை உணர்ந்து பொறுத்தருள்க’ என்று வேண்டிய அவளை நோக்கி, “சென்ற பிறப்பில் உதயகுமரனாகிய இராகுலனுயிரைத் திட்டிவிடம் உண்டதும் பிரிவினைப்பொறுக்க இயலாத நான், தீயில் பாய்ந்து உயிர் விட்டேன் அப்போது நீ எங்கிருந்து