பக்கம்:சேரர் தாயமுறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயழறை, அதாவது செங்குட்டுவனுக்குச் சேரல் ஆதனைத் தந்தையும் சோழன் மணக்கிள்ளியைத் தாயுமாகக் கருதிவந்தனர். இம்முறைக்கு வேறு ஆதாரமிருந்தால் அதைக் கண்டபோது விசாரிப்போம். இதுவரை யும் பலரும் இத்தொடரொன்றையே இதற்கு ஆதரவாக எடுத் தாளப் பார்க்கின்றோம். இத்தொடர் இப்பொருள் தருமாறில்லை யென்பது மட்டும் இதைச் சிந்திக்கப்புகுந்தவுடன் தெளிவாகிறது. (3) இப்போது நிற்குநிலையில் இத்தொடரில் செங்குட்டுவன் காய் (பெயர்) குறிக்கப்படவில்லை. 'சோழன்மணக்கிள்ளி' ஆண்டாற் பெயர்; அதனால் செங்குட்டுவனின் காய்பெயராகாட்டாது. மணச் கிள்ளி என்பது அவன் காயின் இயற்பெயராகவும், அவளை ஒரு சோழன்மகளாகவும் சிலர் கருதுவர். மணக்கிள்ளி என்னும் சொல் ஒரு பெண்பாற்பெயராய் யாண்டும் வழங்கக் காணற்கில்லை. அதற்கு மாறாகப் பலவிடத்தும் கிள்ளி என்பது ஆண்பாற்பெயராய்ச் சோழ மன்னர் பலருக்குரிய சிறப்புப்பெயராய் வழங்கிவருவது பிரசித்தம். வென் வேற்கிள்ளி', நெடுங்கிள்ளி', 'கழற்கிள்ளி', 'நெடுமுடிக்கிள்ளி', வடிவேற்கிள்ளி', 'இளக்கிள்ளி', 'மாவண்கிள்ளி' எனப் பலபெய ருடைய சோழ வேந்தரைச்கட்டும் பாட்டுக்கள் சங்க நூல்களிற் பல காணலாம். இப்படிச் சிலமன்னரின் கிறப்புடைப் பெயராவது மன்றி, சோழர்குடியாசருக்கே இது நிலைத்த ஒரு பொதுப் பெயராகவும் துலங்குகிறது திவாகரத்தில், கோச் சோழன் பெயர் 'சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன்" என்று சேந்தனார் கூறிப்போவதனால், இச்சொல் சோழமன்னர் பொதுப்பெயராதல் தெளியப்படும். ஆகவே இப்பதிகத்தொடரில் மணக்கிள்ளி' யென்பது, யாதொரு பெண்ணையும் குறியாமல் சோழன் பெயராக வே நிற்பதெனக்கொள்ளு தலே முறைமையாகும், (4) பின்னும் மற்றைப் பதிகங்களிலெல்லாம் பாட்டுடைத் தலைவரின் தாய்மார் பெயர் சுட்டினும் சுட்டாவிடினும், அவ்வவரின் தந்தையர் பெயர் தவறாமற் சுட்டப்படுவது கவனிக்கத்தக்கது. அதன் சிறப்புக்காரணத்தைப் பின்னர் விசாரிப்போம் * இவ்விடத்தில் மற்றப்பதிசுப்போக்குக்கு மாமுக 5-ஆம் பதிகத்தில் மட்டும் தந்தை

  • ஈ-ஆம் பகுதி 4-ஆவது உட்பிரிவில் காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/45&oldid=1444785" இலிருந்து மீள்விக்கப்பட்டது