உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரர் தாயமுறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை, பெயரைச்சுட்டாமல் விடவும், தாயைமட்டும் மணக்கிள்ளியௌ விசுத்து கூறவும் கனிக்காரணம் ஒன்றுமில்லை. பதிகங்களெல்லாம் ஒரே ஆசிரியர் செய்தனவென்றே ஆராய்ச்சியாளானை வரும் வகிக் இன்றனர். இப்பதிகப்புலவர் பிற இடங்களிலெல்லாம் தாம் கொண்ட முறையை இங்குமட்டும் கைவிடக்கருதுவானேன்? அவர் நன்றென யாண்டும் கையாண்ட ஒரு துறையை கெகிழாமல் இப்பதி கத்திலும் பின்பற்றியதாகக் கொள்வதே முறையாகும். மற்றெஸ்லாப் பதிகங்களிலும் பாட்டுடைத் தலைவரின் தந்தை யர்க்குரிய இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒருங்கே கூறப்படுகின் றன. அது போல் இதிலும் கூறப்பட்டிருக்கவேண்டுமெனக்கொள்ளு வது நியாயமாகும். அம்முறையிற் சோழன் என்ற சிறப்புப்பெயரின் பின் மணக்கிள்ளி என்று அவன் இயற்பெயர் சொல்லப்படுவது அவ சியமும் பொருக்கமுமாகும். (5) இன்னும் அடியார்க்குகல்லாரும் பிறரும் செங்குட்டுவன் தாய்பெயர் நற்சோணை என விதந்து கூறுகின்றனர். யாண்டும் அவர் மணக்கிள்ளி என்பது அவள் பெயரெனச் சுட்டவில்லை. இவை பல வற்றாலும் ஈண்டு மணக்கிள்ளி யென்பது செங்குட்டுவன் தந்தை பெயராகவேண்டுமென்பதே நிலைபெறுகிறது. (6) ஆனால் சோழன் மணக்கிள்ளி சேரலாதற்குத் தானே மகப் பெறமாட்டான். ஐயனாரைப்பெறுவிக்கும் ஹரிதாரக்கூட்டம் மக்கட் இல்லை. பெண்ணின்றி இருபுருடர் தம்மளவில் புத்திரப்பேறெய்தற் சில்லை. அதனால், செங்குட்டுவனை ஈன்ற தாயைச் சுட்டுஞ்சொல் லொன்று இத்தொடரில் இருக்கவேண்டுவது அவசியம். (7) இனி, மணக்கிள்னியைப் பெண்பெயாகவே கொள்வதானா இங்கூட அப்பெயருடைப்பெண்ணுக்கும் சோழனுக்கும் உள்ள முறை குறிக்குஞ்சொல்லெதுவும் இல்லாததால் இத்தொடருக்குப் பொருளில்லா தாகிவிடும். இருவேறுபாலா ரிருவரியற்பெயர்களின் வெறும் தொடையால் அவர்களின் முறையியைபு தெளியுமாறில்லை. ஆகையால் எப்போதும் அப்பெயர்த்தொடர்கள் தம்மிடை இயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/46&oldid=1444786" இலிருந்து மீள்விக்கப்பட்டது