பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

செளந்தர கோகிலம்



கார்ந்து கொண்டான். கற்பகவல்லியம்மாள் வந்துவிட்டாள் என்பதை உணர்ந்த சில விருந்தாளிப் பெண் பிள்ளைகள் பக்கத்து விடுதியிலிருந்து எழுந்து வந்து பூஞ்சோலையம் மாளுக்குப் பக்கத்தில் நின்று, அந்த வரவேற்பில் தாங்களும் கலந்து கொண்டனர். அவ்வாறு சேர்ந்த ஸ்திரீகளும் பூஞ் சோலையம்மாளும் கற்பகவல்லியம்மாளை அன்பாக உபசரித்து அந்த மகாலிலிருந்த பக்கத்து விடுதிக்கு அழைத்துப் போயினர். அந்த விடுதி முன் மஹாலில் முக்கால் பங்கு விசாலமுடையதாக இருந்தாலும், அதைவிடப் பன்மடங்கு அதிகமாக சிங்காரிக்கப் பட்டிருந்தது. அந்த விடுதி ஸ்திரீ விருந்தினரை உட்கார வைத்து உபசரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் ஸோபாக்களும், நாற்காலிகளும் இருந்ததன்றி கருங்காலி மரங்களாலும், சலவைக் கற்களாலும் அமைக்கப்பட்டிருந்த விசிப்பலகைகள் வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் காணப் பட்டுக் கண்ணாடிபோல மனிதரது சாயலைத் தோற்றுவித்தது. அவ்விடத்தில் உயர்ந்த ஆடையாபரணங்களை அணிந்திருந்த வர்களான ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் கும்பலாக உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் கோகிலாம்பாளும் செளந்தரவல்லியும் கலியாணப் பெண்கள் போல அலங்கரித்து சர்வாபரணபூஷிதராய், தெய்வ லோகத்துக் கன்னிகை களோவென அனைவரும் ஐயுறும்படி தேஜோமயமாக உட்கார்ந் திருந்தனர். அழகின் திரளாகக் காணப்பட்ட அவ்வணங்குகள் இருவரையும் கண்ட கற்பகவல்லியம்மாள், அவர்களே, பூஞ் சோலையம்மாளது செல்வக்குமாரிகள் என யூகித்துக் கொண் டவளாய், மிகுந்த பிரமிப்பும் திகைப்புமடைந்து ஸ்தம்பித்துப் போனாள். அந்த மடந்தையர் இருவரும் ஒரே அச்சில் வார்த்தெடுக்கப்பெற்ற பத்தரைமாற்றுப் பசும்பொன் பாவைகள் போல இருந்த அற்புத அமைப்பானது எவரும் எவ்விடத்திலும் கண்டிராத அபூர்வ சிருஷ்டியாக இருந்தது. அவர்களில் மூத்தவள் யாவள் இளையவள் யாவள் என்பது தெரியாமல் இருந்ததைக் கண்ட கற்பகவல்லியம்மாள் நிரம்பவும் திகைத்துத் தடுமாறிப் போனாள். ஆனால், அவர்களுள் கோகிலாம்பாள் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உயர்வான கெம்புகளும், பச்சைகளும் நிறைந்த ஆபரண ஜோடிப்பையும், அதுபோல செளந்தரவல்லி