பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 8i

கொண்டிருந்த பூஞ்சோலையம்மாள் மிகுந்த சந்தோஷமும் பூரிப்பும் அடைந்து அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம் போன்ற குளிர்ந்த இனிய முகத்தோடு எதிரே தோன்றி வர வேண்டும் வர வேண்டும்; எங்கே ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் வராமல் இருந்துவிடப் போகிறீர் களோ என்று நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம், நல்ல வேளையாக வந்து சேர்ந்தீர்களே! நிரம்ப சந்தோஷ மாயிற்று” என்று குதுகலமாகக் கூறினாள். அவர்கள் இருந்த மகால் மேஜைகளும், நாற்காலிகளும், சோபாக்களும், ஊஞ்சல் பலகைகளும், பூந்தொட்டிகளும், படங்களும், நிலைக்கண்ணாடி களும், இன்னும் எண்ணிறந்த அலங்காரப் பொருட்களும் நிரம்பப் பெற்றதாய், ஒரு மகாராஜனது கொலுமண்டபம் போலக் காணப்பட்டது. தரையில் ஒரு முழு உயரம் மெத்தை போல வழுவழுப்பான இரத்தினக் கம்பளம் விரிக்கப் பட் டிருந்தது. அப்படிப்பட்ட மகா உன்னதமான இடத்தை கற்பக வல்லியம்மாள் தனது ஆயுட்காலத்திலேயே கண்டறி யாதவள் ஆதலால், அந்த அம்மாள் அபரிமிதமான வியப்பும், மதிப்பும், பயமும் அடைந்தவளாய், அங்கே காணப்பட்ட ஒவ்வோர் அலங்காரத்தையும் உற்று உற்று நோக்கியவளாக ஒரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து நின்ற பின் பூஞ்சோலையம்மாளை நோக்கி, "பத்து மணிக்கு வருவதாக வாக்குக் கொடுத்து விட்டு வராமல் இருப்போமா! தலை போவதானாலும், அதைக் கவனியாமல் வந்துதான் தீர வேண்டும்' என்று புன்சிரிப்போடு விநயமாகக் கூறினாள்; அன்றையதினம் நடத்தப்படும் விருந்திற்காக, அவர்கள் சென்னையிலுள்ள தங்களது நண்பரும், தூரபந்துக் களுமான வேறே சிலருக்கும் செய்தியனுப்பி இருந்தார்கள். ஆதலால், ஆண்பெண்பாலாரில் சுமார் இருபது முப்பது மனிதர் முன்னரே வந்திருந்தனர். அந்த மகாலில் உட்கார்ந்திருந்த ஆண் பிள்ளைகளில் முக்கியஸ்தராக இருந்த ஒருவர் கண்ணபிரா னண்டை போய், “வாருங்கள் இப்படி சோபாவில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஸ்திரீகள் பக்கத்து விடுதியில் இருக்கிறார்கள். தங்களுடைய தாயாரும் அங்கே போகட்டும்” என்றார். அதைக் கேட்ட கண்ணபிரான் மிகுந்த லஜ்ஜையடைந்தவனாய் ஒரு பக்கமாய்ச் சென்று அங்கே கிடந்த ஒரு நாற்காலியின் மேல் உட்

செ.கோ.i-7