பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

செளந்தர கோகிலம்



குணத்தையும், சுத்தமான மனசையும், தங்கள் புத்திரருடைய தங்கமான குணத்தையும் பார்க்கப் பார்க்க, தங்கள் இருவரையும் இவ்வளவு சீக்கிரத்தில் அனுப்பி விட எங்கள் மனசு சம்மதிக் கவில்லை. ஆகையால், தாங்கள் இருவரும் இன்னும் நாலைந்து நாள் இவ்விடத்திலேயே சந்தோஷமாக இருந்து விட்டுப் போகலாம். தங்களுடைய குமாரர் இங்கிருந்தே ஆபீசுக்குப் போவதற்குத் தேவையான வசதிகளையெல்லாம் நாங்கள் செய்து தருகிறோம். நாங்கள் மூவரும் தனியாகவே இருப்பதால் தங்களைப்போன்ற விருந்தினர் வந்து எங்களோடு சந்தோஷமாக இருக்கமாட்டார்களா என்று நாங்கள் ஏங்கிக் கிடக்கிறோம். ஆகையால், திடீரென்று மற்ற எல்லோரும் போய்விட்டது போலத் தாங்களும் போய்விட்டால், எங்களுக்கு இந்த இடத்திலேயே இருக்கை கொள்ளாமல் வெறித்துப் போய்விடும்" என்று மிகுந்த உவப்போடு கூறி உபசரித்தாள்.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் சிறிது நேரம் தத்த ளித்து, "ஆகா! இவ்வளவு அன்பாக எங்களை யார் உபசரிக்கப் போகிறார்கள்! தாங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போதும் அதை மறுத்து நான் பேசவது கொஞ்சமும் அழகல்ல. ஆனால், ஒரு விஷயம் இருக்கிறது. நாங்கள் இருக்கும் ஜாகை தனியான இடம், அங்கே திருடர் பயம் அதிகம். நாங்கள் வீட்டில் இல்லை யென்பது தெரிந்தால், திருடர்கள் பகலிலேயே உள்ளே புகுந்து கொள்ளைடித்து விடுவார்கள். இராத்திரிக் காலத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இந்த ஒரு தொல்லையைப் பற்றித்தான் நான் யோசிக்கிறேன். இல்லாவிட்டால், இங்கே இருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது எங்களுக்குக் கசக்கிறதா' எனறாள.

அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாள், அதற்குத் தான் என்ன விதமான சமாதானம் சொல்வதென்பதை உணராமல் சிறிது நேரம் மெளனமாக இருக்க, அப்போது அந்த அம்மா ளுக்குப் பின்பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்த கோகிலாம் பாள் தனது அன்னையின் செவியில் ஏதோ சில வார்த்தைகளைச் சொல்ல, உடனே பூஞ்சோலையம்மாள் கற்பகவல்லியம்மாளை நோக்கி நயமாகப் புன்னகை செய்து, 'திருடர்களைப்