பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 91.

பற்றித்தானே பயப்படுகிறீர்கள்? எங்களுக்கு இந்தப் பங்களாவில் ஒரு சுமார் ஐம்பது வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்களுள் இரண்டு மூன்று பேரை அனுப்பித் திண்ணையில் படுத்திருக்கச் செய்வோம். எப்படிப்பட்ட திருடர்கள் வந்தாலும், இவர்கள் தவிடு பொடியாக்கிவிடுவார்கள். ஆகையால் அதைப்பற்றித் தங்களுக்குக் கொஞ்சமும் கவலையே வேண்டாம்' என்றாள்.

அதைக் கேட்ட கற்பகவல்லியம்மாள் அதற்குமேல் எவ்வித ஆட்சேபமும் சொல்ல மாட்டாமல், "சரி எங்கள் பொருட்டு தாங்கள் எப்படிப்பட்ட ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கையில், நாங்கள் வேறே அநாவசியமாக ஆட் சேபணைகளைச் சொல்லிக் கொண்டிருப்பது ஒழுங்கல்ல. ஆனால், சாண் பிள்ளையானாலும், ஆண்பிள்ளையே அதிகாரி யென்று உலகத்தார் சொல்லுவார்கள். ஆகையால் நான் போய் இந்த விஷயத்தை என்னுடைய பிள்ளையிடத்தில் சொல்லி, அவனுடைய விருப்பம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்டுக்கொண்டு வருகிறேன்” என்றாள்.

பூஞ்சோலையம்மாள் அதற்கிணங்க, உடனே கற்பகவல்லி யம்மாள் பக்கத்து மகாலை நோக்கிச் சென்றாள். அவ்விடத்தில் ஒரு லோபாவின் மேல் உட்கார்ந்து சாய்ந்திருந்த கண்ணபிரான் தனது தாய் வந்ததைக் கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனது மனதில் ஒருவித கவலை உண்டாயிற்று. முகம் மாறுபட்டது. தான் அன்றைய தினம் காலை முதல் மாலை வரையில் அந்தப் பங்களாவிலிருந்தும், கோகிலாம்பாள் முதலிய எவரையும் காண இயலாமல் போனது பற்றி அவன் மிகுந்த கலக்கமும் கலவரமும் அடைந்திருந்தவனாய், மாலைப் பொழுது வந்துவிட்டதைக் கருதி தனது தாய், வீட்டிற்குப் போகத் தன்னை அழைப்பாளோ என்ற கவலையும் சஞ்சலமும் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தி ருந்தான். அந்த நிலைமையில் தனது தாய் வந்ததைக் கண்டு, அவள் தன்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போகத்தான் வருகிறாளென்று உடனே யூகித்துக் கொண்டவனாய், ஒன் றையும் அறியாதவன்போல அந்த அம்மாளை நோக்கி, “ஏனம்மா வீட்டுக்குப் போகலாமா” என்று கபடமாக வினவினான்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள். 'இல்லையப்பா! நான் வீட்டுக்குப் போகத்தான் புறப்பட்டேன். அவர்கள் விட