பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 1O3

அயிர்த்தவனாய் நடந்து முன்னிருந்த அழகிய மகாலை அடைந்தான்.

அதற்குள் அங்கே வந்து அவனது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த கற்பகவல்லியம்மாள் அவனது பரிதாபகரமான நிலைமையைக் கண்டு நிரம்பவும் பதறிப்போய்த் தனது கைகளைப் பிசைந்துகொண்டு, 'அப்பா தம்பி என்ன இது? உனக்கு உடம்பு என்ன செய்கிறது? ஏன் இப்படித் துவண்டு தள்ளாடி விழுகிறாய்? உள்ளதை வெளிப்படையாகச் சொல்; ஏன் மறைக்கிறாய்? வேண்டுமானால், ஒரு டாக்டரை வர வழைத்துக் கைபார்த்து மருந்து கொடுக்கச் சொல்லலாம்; இது அன்னியர் இடமாயிற்றே என்று லஜ்ஜைப் படாதே. இந்தமாதிரி உடம்பு அசெளக்கியமாக இருக்கிறது என்பதை இந்த வீட்டு எஜ மானியம்மாளும், அவர்களுடைய பெண்களும் கேட்பார்க ளானால் நிரம்பவும் பதறிப் போய், உடனே, இதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள். இவர்கள் எல்லோரும் தங்கமான மனிதர்கள். இந்த இரு பகலுக்குள் இவர்கள் ஆயிரங்காலம் பழகினவர்கள் போல ஆய்விட்டார்கள். என்னிடத்தில் தங்களு டைய உயிரை வைத்து, என்னைத் தரையில் விடமாட்டேன் என்கிறார்கள். இப்படிப்பட்ட வர்களிடத்தில் நாம் வித்தியாசம் பாராட்ட வேண்டியதில்லை. உண்மையைச் சொல்; நான் போய் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்கிறேன்” என்று மிகுந்த வாத்சல்யத்தோடு கூற, அதைக் கேட்ட கண்ணபிரான், 'அம்மா! எனக்கு உடம்பில் ஒன்றுமில்லை. பித்தம் கொஞ்சம் அதிகரித் திருப்பதால், ஆகாரம் உள்ளே செல்லமாட்டேனென்கிறது; சாப்பாட்டைக் கண்டால் ஒக்காளம் வருகிறது. அதற்கு ஒருதரம் பேதிக்குச் சாப்பிட்டால், சரிப்பட்டுப் போகும்; இந்த சாயங்கால வேளையில், அதற்கு ஒன்றும் பரிகாரம் செய்ய முடியாது. இன்றைய ராத்திரியும் சாதம் சாப்பிடாமல் லங்கணம் போட்டால் உடம்பு நாளைக்குள் படிமானத்துக்கு வந்து விடும். அவர்களிடத்தில் இந்தப் பிரஸ்தாபத்தையே நீங்கள் எடுக்க வேண்டாம்' என்றான். கற்பகவல்லியம்மாள் மிகுந்த அருவருப்போடு பேசத் தொடங்கி, "நித்திய தரித்திரமாகவே இருக்க வரம் வாங்கி வந்திருக்கிறவர்களை குபேரனுடைய மாளிகையில் கொண்டு போய் வைத்தாலும், அங்கே இருக்கும்