பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

செளந்தர கோகிலம்



அபாரமான சம்பத்தைப் பார்ப்பதற்குக் கூட முடியாமல் அவர்களுக்கு உடனே கண் அவிந்து போய்விடாதா பரம ஏழையாகிய நம்மை இவர்கள் கொணர்ந்து வைத்துக்கொண்டு அன்பை மழையாகப் பொழிந்து, மரியாதையை அள்ளிச் சொரிந்து நம்மை சந்தோஷப்படுத்தி, பரஸ்பரம் நம்முடைய அன்பையும் பிரியத்தையும் அடைய விரும்புகிறார்கள். நீ பட்டினி கிடந்து வலிக்காரன்போல, சுணங்கிச் சுணங்கி மூலையில் படுத்துக்கொண்டு மூக்கால் அழுகிறாய். இன்று காலையிலிருந்து, உனக்காக இவர்கள் பணத்தையும், சாமான் களையும் அள்ளி இறைத்து உன்னை சந்தோஷப்படுத்த எவ்வளவோ பாடுபடுகிறார்கள். இவர்களுடைய ஜாகையிலுள்ள தண்ணீர் கூட உனக்கு விஷமாகப் போய்விட்டதே என்னவோ நான் செய்த பூஜா பலனும் நீ வாங்கி வந்த வரமும் இவ்வளவு தான் போலிருக்கிறது. இன்றைய பகல் விருந்தில், கும்பவில் கோவிந்தம் போடுவதுபோல நீ என்ன செய்தாயென்பது தெரியாமல் போய்விட்டது. நீ ஒன்றையும் சாப்பிடவில்லை என்பதை வேலைக்காரர்களிடத்தில் கேட்டு அவர்கள் தெரிந்து கொண்டு உன்னுடைய தேகஸ்திதியைப் பற்றிக் கவலைப்பட்டு ஆயிரம்தரம் கேட்டு விட்டார்கள்; இப்போதும் உனக்கு நல்ல விருந்து தயாரித்திருக்கிறார்கள். நீ இப்போதாவது மனம் பிடித்துக் கொஞ்சம் சாப்பிடுவாயென்று நான் நினைத்தால், நீ லங்கணம் போடுவதாகச் சொல்லுகிறாய்; இது உனக்கே சரியாக இருந்தால் சரிதான்' என்று நிரம்பவும் நிஸ்டுரமாகவும் விசனமாகவும் பேசினாள்.

அதைக்கேட்ட கண்ணபிரான் பணிவாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, "என்ன அம்மா இப்படிப் பேசுகிறீர்களே! நீங்கள் கோபமாகப் பேசுவதைப் பார்த்தால் நான் வேண்டு மென்று இப்படி வேஷம் போடுகிறென்று நினைப்பதுபோல் இருக்கிறதே. எனக்கென்ன இவர்களின் மேல் மனஸ்தாபமா? அப்படி மனஸ்தாபம் இருந்தால், இங்கே வர முடியாது என்று காலையிலேயே நான் சொல்லியிருக்க மாட்டேனோ? அதெல்லாம் ஒன்றுமில்லை. நேற்று இராத்திரி முதல் என்னு டைய உடம்பு இருந்த நிலைமை உங்களுக்குத் தெரியாதா? ஏதோ பெரிய மனிதர்கள் பிரியமாகக் கூப்பிடும்போது, மறுக்கக்