பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

செளந்தர கோகிலம்



எடுத்துத் தனது விருப்பத்தை வெளியிட்டு விட்டாள். அப்போதே நாங்கள் இருவரும் இதைப் பற்றித் தீர்க்கா லோசனை செய்து இந்த முடிவுக்கு வந்து விட்டோம். அதை நிறைவேற்றி வைப்பதற்காகவே நாங்கள் இன்று இந்த விருந்தை வைத்து உங்களை அழைத்து வந்தோம். ஏதடா இவர்கள் இவ்வளவு தூரம் பகடமாகவே நடந்திருக்கிறார்களே என்று நீங்கள் நினைக்கக் கூடாது. ஏனென்றால், இது கலியாண விஷயம். எதிராளியின் நோக்கத்தை உணர்ந்தே பேச வேண்டும். இல்லாவிட்டால், ஏளனமும், அவமானமும் உண்டாய்விடும். ஆகையால், இந்த விஷயத்தில் இனி எவ்வித வித்தியாசமும் பாராட்டாமல் உங்களுடைய அபிப்பிராயத்தைத் தாராளமாக வெளியிடலாம். உங்களுடைய குழந்தை இன்னும் தூங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறோம். அவரோடு கலந்து யோசனை செய்து முடிவைத் தெரிவிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் போய் அவரோடு பேசிவிட்டு வாருங்கள். அவர் படுத்திருக்கும் இடத்தில் வேறே யாரும் இல்லை’ என்றாள்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த குதூகலமும், கிலேசமும் அடைந்தவளாய், "குபேரனுடைய சம்பத்து தானாக வரும்போது அதை யாராவது வேண்டாமென்று விலக்குவார் களா? இந்த இடத்தில் சம்பந்தம் கிடைப்பதற்கு நாங்களும் எங்கள் முன்னோர்களும் எத்தனையோ கற்பகாலம் அருந்தவம் புரிந்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இந்தச் சம்பந்தம் ஏற்பட வேண்டுமென்று தெய்வத்தின் திருவுள்ளம் இருந்தால் அப்படியே நிறைவேட்டும். இதில் நானும் என் னுடைய மகனும் முடிவு செய்ய என்ன யோக்கியதை இருக் கிறது? எல்லாம் சிவன் செயல். கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் அவனுக்கு அதிகாரமேயொழிய நமக்கென்ன இருக்கிறது. ஆனால், ஒரு காரியம்; இப்படிப்பட்ட எதிர்பாராத பெரும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கின்றது என்ற சந்தோஷ சங்கதியை மாத்திரம் நான் உடனே போய் அவனிடம் தெரிவித்துவிட்டு வருகிறேன்” என்று கூறினாள்.

அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், "சரி, சொல்லிவிட்டு வாருங்கள். நாளைய தினம் காலையில் புரோகிதரை வரவழைத்து,