பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும்

நிச்சயதார்த்தம், கலியாணம் ஆகிய இரண்டுக்கும் நாள் பார்த்து விடுவோம்” என்று முடிவாகக் கூறினாள்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த மகிழ்ச்சியும், குதுகலமும் அடைந்தவளாய் எழுந்து தனது புதல்வன் சயனித் திருந்த மகாலை நோக்கி நடந்தாள்; அப்படிப்பட்ட மகா பிர மாதமான சந்தோஷச் செய்தியைத் தான் தனது மகனிடத்தில் எப்படி வெளியிடுவது என்பதை அறியாமல் மிகுந்த மனக் குழப்பம் அடைந்தவளாய், கண்ணபிரான் சயனித்திருந்த மஞ் சத்தை அணுகி மெதுவாகத் 'தம்பி தம்பீ' என்று மிகுந்த பதைப்போடு கூப்பிட்டு அவனைத் தட்டி எழுப்பினாள்.