பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

னிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது நண்பர் நெடுஞ்செழியன், "'விஞ்ஞான மொழியாகவும்

தொழில் நுட்ப மொழியாகவும் ஆங்கிலம் விளங்க வேண்டும், கல்லூரிகளில் ஆங்கிலத்தின் இடம் இன்று போல என்றும் உறுதி யாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார்.

தமிழின் சக்தி அறிவீர்
இந்தி எதிர்ப்புணர்ச்சி அவரிடம் மேலோங்கி நிற்பதின்

விளைவாக ஆங்கிலமே சர்வதேச மொழி என்று ஆங்கிலத்தைப் பற்றி பெருமை பேசுகிறார். இதனால் தான் ராஜாஜி, சர்.சி. பி, ராமசாமி அய்யர், ரத்னசாமி, மிர்ஸா இஸ்மேயில், பி. டி. ராஜன் முதலிய அந்த" நல்லறிவாளர் " வரிசையில் அண்ணாத்துரையும், நெடுஞ்செழியனும் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த "நல்லறி வாளர் "கனின் கருத்துக்கள் தங்குதடையற்ற தமிழ் வளர்ச்சிக்கு உறுதியான உதவியளிக்குமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமது கவிச் சக்கரவர்த்தி பாரதி,

"வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே :::வானமளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே."

என்று பாடினான். இவ்வாறு பாடுவதின் மூலம், இந்தப் பிரபஞ்சம் கண்ட எந்த உண்மையையும் தமிழனால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறான்,

எந்த மொழியில் வெளியிடும் கருத்தையும் தமிழில் வெளியிட

முடியும் என்ற உறுதி இந்த நூற்றாண்டைய, வளரும் ஜனநாயகத் தமிழனின் உறுதி. இதனால்தான்,அன்று பாரதி,

"புத்தம்புதிய கலைகள்---பஞ்ச
பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே---அந்த
மேன்மைக் கலைகள் தமிழிவில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை---அவை
சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை;
மெல்லத் தமிழினிச்சாகும்---அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்."