பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
11

"என்றந்தப் பேதை உரைத்தான்--ஆ!
         இந்த வசையெனக் கெய்திடலாமோ?
      சென்றிடுவீர் எட்டுத்திக்கும்--கலைச்
         செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்."

என்று நமக்கு ஆணையிட்டான்.

சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரையும், பிறமொழி

கண்ட சிறந்த கருத்துக்களை தமிழில் வடித்தெடுக்க முடியாது என்று தமிழ் என்றுமே நொண்டியடித்ததில்லை.

"அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி
        குறுகத் தரித்த குறள்."

அருளிய வள்ளுவப் பெருந்தகை தமிழன்னையின் மணிவயிறுபெற்ற பிள்ளை என்ற உண்மையை எனது நண்பர் நெடுஞ்செழியன் அறியாததல்ல. அதேபோன்று,

"எல்லையொன் றின்மை எனும் பொருள் அதனை
         கம்பன் குறிகளால் காட்டிட முயலும்."

முயற்சியைக் கண்ட கம்பன் தமிழ், தமிழன் வளர்த்த தமிழ் என்பது தமிழறிந்த நெடுஞ்செழியனுக்குத் தெரியாததல்ல. இத்தகைய தமிழுக்கு, "விஞ்ஞானம், தொழில் நுட்பம் எட்டாத தூரம்"என்று கூறுகிற மதிப்பிற்குரிய லெட்சுமணசாமி முதலியார், ரத்தினசாமி முதலியார், சி. பி. ராமசாமி அய்யர் ஆகிய அந்த "நல்லறிவாளர்" வரிசையில் நெடுஞ்செழியனும் நிற்கிறார். (கைதட்டலும், சிரிப்பும்). "அந்த நல்லறிவாளர் " இதை அறியார்களா?

கடந்த ஐம்பதாண்டுகளாக மாதவய்யாக்களும், பண்டித மயில் வாகனய்யாக்களும்,பாரதியார்களும்,அப்புசாமிகளும்,சீனிவாசன்

களும், பற்பல பேராசிரியர்களும், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்களும், தமிழில் விஞ்ஞானம் பேசி வருகிறார்கள். கலைச்சொல் அகராதிகளும்,கலைக்களஞ்சியத் தொகுதிகளும்,கலைக்கதிர்போன்ற பத்திரிகைகளும் தமிழ் விஞ்ஞான அறிவுத்துறையில் முன்னேறி வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி வருகின்றன. ஆங்கிலத்துக்குப் பதில்,பள்ளிக்கூடப் பாடங்களில் புகுந்த தமிழ், பள்ளி இறுதிப் படிப்பைத் தாண்டி, கல்லூரிகளில் நுழையத் தகுதி பெற்று வந்துவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் இன்றும் என்றும் ஆங்கிலத்திலேயே வேண்டும் என்கின்ற " நல்லறிவாளர்கள்" அறியமாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.