பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 12

   பல்கலைக் கழக சுயாட்சிக்குப் பயந்து, கல்லூரிகளில் தமிழை

அரியணை ஏற்ற, தயங்கித் தயங்கி நின்ற ஆளவந்தார்களும், கல்லூரிகளில் இனித் தமிழை போதனா மொழியாக ஆக்குவோம் என்று தீர்மானித்துவிட்டார்கள், சர்வ ஜன சம்மதமாக வரவேற் கத் தகுந்த இந்த நற்செய்தியும் நம் "நல்லறிவாளர்கள் " அறியாத தல்ல. இவ்வளவுக்கும் பின், இந்த "நல்லறிவாளர்கள் " 'ஆங்கி லம்தான் விஞ்ஞான மொழியாக இருக்க முடியும், தொழில் நுட்ப மொழியாக இருக்க முடியும் ' என்று கூறினால், இது எதைக் காட்டு கிறது. சுடச்சுடக் கண்டுபிடிக்கப்படும் புத்தம் புது விஞ்ஞான உண்மைகளைச் சுடச்சுட தெரிந்து கொள்ளும் பொருட்டு, விஞ்ஞா னத்துறை ஆராய்ச்சி மாணவர்கள், அண்ணாமலை, சென்னை பல்கலைக் கழகங்களிலும் சரி, இதர பல்கலைக் கழகங்களிலும் சரி, ஆங்கிலம் போதாதென்று ஜெர்மன் மொழியைக் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறார்களென்பது நமது " நல்லறிவாளர் "களுக்குத் தெரியாதா, என்ன?"

தமிழா ? ஆங்கிலமா என்பதே கேள்வி

            "தோழர்களே ! எனது பேச்சின் தொடக்கத்தில் எடுத் 

துக் காட்டியபடி, இந்த சகாப்தம், செயற்கைச் சந்திரன் சகாப்தமாக உருவாகிவிட்டது. ஆங்கில, அமெரிக்க, ஜெர்மன் விஞ்ஞானிகள், சோவியத் விஞ்ஞானிகளின் துரித துரிதாதீத முன் னேற்றத்தைக் கண்டு திகைப்பும் வியப்பும் கொண்டு மூக்கில் விரல் வைத்து நிற்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் சோவியத் விஞ்ஞானிகளின் முன்னேற்றத்தைத் தங்களால் ஏணி வைத்தும் எட்டிப்பிடிக்க முடியாது என்றும் பகிரங்கமாக ஒப்புக்கொள் கிறார்கள்.

     இந்தக் காலகட்டத்தில்தான், நமது நல்லறிவாளர்கள்  

விஞ்ஞான மொழியாக ஆங்கில மொழியே இருக்க வேண்டும் என் கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது?

     நேற்று முன்னால் ஆங்கிலத்தில் விஞ்ஞானம் கற்ற உலகம், 

நேற்று ஜெர்மன் மொழியில் கற்கத் தொடங்கிற்று ; இன்று ரஷ்ய மொழியில் கற்கத் தொடங்குகிறது, நாளை சீன மொழியிலும், வங்க மொழியிலும், நமது உயிருக்குயிரான தமிழ் மொழியிலும் கற்கத் தொடங்காது என்று இந்த "நல்லறிவாளர்களால் தீர்க்கதரிசன மாகக் கூறமுடியுமா? ஒரு மொழி உலகு தழுவும் விஞ்ஞான மொழியாகச் சிறந்து விளங்குவது அந்த மொழியின் சுயம்பான தன்மையில் மட்டும் அடங்கவில்லை. அந்த மொழி பேசும் மக்களின் விஞ்ஞான முயற்சியின் நன்முயற்சியிலும் முன் முயற்சியிலும் தான் சிறப்பாக அடங்கியிருக்கிறது. ஆங்கிலம்தான் விஞ்ஞான மொழி