பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

அவர்கள் மீது மத்திய சர்க்காரின் அனுமதியின்றி எவ்வித நடவடிக்கையும் ராஜ்ய சர்க்காரால் எடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. |

கேரளத்தில் கல்வி மசோதா சட்டசபையில் சிறைவேற்றப்பட்டும், ஜனாதிபதியின் அனுமதி கிடைக்காததால், அமுலுக்கு வர

இயலாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. ராஜ்ய சர்க்காருக்கே சம்பந்தப்பட்ட விஷயத்திலும்கூட, மத்திய சர்க்காருக்கு எவ்வளவு பயங்கரமான ஆதிக்கம் இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

சொத்துரிமை விஷயத்தில் அது ஒரு உள்ளங்கை அகலமுள்ள நிலமாயினும் சரி, மத்திய சர்க்காரின் அனுமதியின்றி ராஜ்ய சர்க்கார் தான் நிறைவேற்றுகிற சட்டத்தை அமுல் நடத்திவிட முடியாது.
ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் தேவை
இவ்வாறு அதிகாரம் பணம் முதலிய விஷயங்களை அரசியல்

சட்டம் மத்திய சர்க்காரிடமே குவித்து வைத்திருக்கிறது. எனவே, ராஜ்யங்களிலிருந்து ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்கிற குரல் நியாயமாகவே கிளம்பிக்கொண்டிருக்கிறது.

பண விஷயத்தைப் பொறுத்த வரையில் மத்திய சர்க்காரிலிருந்து, மாகாண சாக்கார்களுக்கு இன்று கிடைப்பதைவிட அதிக

தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாகவே, எல்லா ராஜ்யங்களிலும் எழுந்துள்ள கோரிக்கையாகும்.

சமீபத்தில் சந்தானத்தை தலைமையாகக் கொண்ட நிதிக்

குழுவை மத்திய சர்க்கார் அமைத்தது. அதன் சிபாரிசு என்ன தெரியுமா? வருமான வரியில் 50 சதமானம் ராஜ்யங்களுக்குக் கிடைத்து வந்ததை 55 சதமானமாக உயர்த்த வேண்டுமென்றும், அதே பொழுதில் ஏற்கனவே ராஜ்யங்களுக்கு கலால் வருமானத்தில் கிடைத்து வந்த 50 சதமானத்தை 25 சதமானமாகக் குறைக்க வேண்டுமென்றும் சிபார்சு செய்திருக்கிறது. கூட்டுவது 5 சதமானம் ! குறைப்பது 25 சதமானம் ! இந்த முறையில் மத்திய சர்க்காரிடமே மேலும் மேலும் பணத்தைக் குவிக்கிறது.

மேற்கூறியவாறு அதிகாரத்தையும், பணத்தையும் மேலும்

மேலும் யூனியன் சர்க்காரிடமே குவித்து வைக்கும் முயற்சியை முறியடித்து, ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரங்களும் அதிக பணமும் கிடைக்கும்படி இந்தியா முழுவதிலுமுள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடி ஆகவேண்டும். குறிப்பாக நம்முடைய ராஜ்யத்துக்கு அதிக அதிகாரமும் அதிகப் பணமும்