உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



31

கிடைக்க நாம் ஒன்றுபட்டுப் போராடவேண்டியது அவசர அவசியம்.

அரசியல் சட்டம் இதற்கு குறுக்கே நிற்கிறது என்பதை நாம்

மேலே பார்த்தோம். அரசியல் சட்டத்திலுள்ள இந்தப் பெரும் குறையை எதிர்த்தா ஈ. வெ. ரா. போர்க் கொடியை உயர்த்தியிருக்கிறார் ? அல்லவே அல்ல.

அரசியல் சட்டம் புனிதமானது, அதில் மாற்றம் ஏற்படக்

கூடாதென்று கம்யூனிஸ்ட்கட்சி அன்றும் சொன்னதில்லை, இன்றும் சொல்லவில்லை. அன்று அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டபொழுது, அரசியல் நிர்ணய சபையில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட்தான் இருந்தார். அந்த சபையில் கம்யூனிஸ்ட் அங்கத்தினராக இருந்த எங்கள் வங்க கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் சோமநாத் லாகிரி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் சட்டத்துக்கு எத்தனையோ திருத்தங்களை வைத்தார்.

பெரும்பான்மைக் கொடுமையால் ஒரு திருத்தம்கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்குள் 6 தடவை காங்கிரஸ்காரர்களே மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நாங்கள் அன்று கொடுத்த திருத்தங்கள் சிற்சில, இன்று அரசியல் சட்டத்திற்குள் புகுந்திருக்கின்றன.

இன்னும் பற்பல திருத்தங்களுக்கு நாங்கள் போராடிக்

கொண்டிருக்கிறோம். ஜனநாயகவாதிகள் அங்கீகரிக்கத் தகுந்த, ஜனநாயக வாதிகள் எடுத்துக் காட்டுகிற, அரசியல் சட்டத்திலுள்ள குறைகளை ஒழிக்க இன்று ஈ. வெ. ரா. முன் வந்திருக்கிறாரா? அதுதான் இல்லை .

நல்ல அம்சத்தை கொளுத்துகிறார்
சட்டத்திலேயே ஒரேயொரு நல்ல அம்சம் என்று ஜனநாயக

வாதிகள் எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தகுந்தது, "அடிப்படை உரிமைகளைப்பற்றிக் கூறும் (Fundamental Rights) சட்டத்தின் 13-வது பிரிவாகும். ஈ. வெ. ரா. இதை ஆட்சேபித்துத்தான் சட்டப் புத்தகத்தை நெருப்பிட்டுக் கொளுத்துகிறார்.

இந்தப் பிரிவிலுள்ள மத சுதந்திரப் பகுதி ஜாதி ஒழிப்புக்கு

பெரிய இடறுகட்டையாக இருக்கிறது என்று சாக்குச் சொல்லித் தான், அவர் எரிப்பு இயக்கத்தில் குதிக்கிறார்,

சகலவிதமான ஏற்றத் தாழ்வுகளுக்கும் பரம விரோதியாக

விளங்குகிற சோவியத் அரசியல் சட்டத்திலும், சீன அரசியல் சட்டத்திலும் இந்த 'மத சுதந்திர' உரிமை ஜம்மென்று இடம் பெற்று இருக்கிறது. அங்கு சமுதாய ஏற்றத் தாழ்வு ஒழிப்புக்கு குறுக்க மறுக்க நடமாட முடியாத இந்த மத சுதந்திரப் பகுதி