பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

இங்கு மட்டும் ஜாதியை ஒழிக்கவிடாது என்று பூச்சி காட்டி, சட்டப் புத்தகத்தை எரிக்கும் திருப்பணியில் இறங்குகிறார் ஈ. வெ. ரா.

இந்தப் போக்கு உண்மையில் ஜாதியை ஒழிக்க உதவுமா?

உதவாது.

சட்டப் புத்தகத்தைக் கொளுத்துவது ஜாதி ஒழிப்புக்குச்

சரியான வழி என்று ஈ. வெ. ரா, கருதினால், அவருடைய வழியை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரோடு ஒத்துழைக்க முடியுமா? ' நமது அரசியல் சட்டம்' என்று கருதுகிற சகல அரசியல் கட்சிகளும், சகல பகுதி மக்களும் ஈ வெ.ரா.வின் சட்டப்புத்தக எரிப்பு நடவடிக்கையை எதிர்க்காமலிருக்க முடியுமா? முடியாது. அப்பொழுது என்ன ஏற்படுகிறது? திராவிடக் கழகத்துக்கும் நேரு சர்க்காரின் பிற்போக்குக்கும் அல்ல போராட்டம் நடக்கும்! சட்டப் புத்தக எரிப்புச் செயல் தி. க. வினருக்கும் அரசியல் சட்டத்துக்கும் பெருமை அளிக்கிற பகுதி மக்களுக்கும் இடையில் பிளவை உண்டு பண்ணுகிறது; மோதுதலை வினைவிக்கிறது.

இது எரிப்பு - எரிப்பு எதிர்ப்பு பிளவாக முடியுமே ஒழிய,

ஜாதி ஒழிப்பு ஒற்றுமையாக உருவாகாது.

ஆகவே, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு, ஜாதி ஒழிப்புக்கு

கொஞ்சமும் துணை போகாது என்பதோடு, மக்களின் ஒற்றுமையை உடைத்து பூசலைப் பெருக்கும் என்பதனால், கம்யூனிஸ்டுக் கட்சி இந்த தகாத செயல் அழுத்தமாகக் கண்டிக்கிறது.

'அன்று காந்தி நாடு'! இன்று காந்திபட எரிப்பு!
"அன்பர்களே! பெரியோர்களே! இதுவரை சட்டப் புத்தக

எரிப்பு ஜாதி முறையை ஒழிக்காது என்பதுமட்டுமல்ல, ஜாதி எதிர்ப்பு சக்திகளை ஒன்றுபடுத்தவும் உதவாது என்று எடுத்துக் காட்டினேன், அதோடு, மக்களிடையில் மோதுதலுக்கு தொண்டிடித்து, மக்கள் ஒற்றுமையை உடைக்கும் பேரபாயமும் கொண்டது என்பதை எடுத்துக் காட்டினேன்.

"ஈ. வெ. ரா, வின் போராட்டத் திட்டத்தில் மற்றொன்றான, காந்தியடிகள் பட எரிப்பு நடவடிக்கை ஜாதி ஒழிப்புக்கு நன்மை

செய்யாது; பதிலாகத் தீமையே விளக்கும்.

"காந்தியடிகள் இறந்தபொழுது ஈ. வெ. ரா. என்ன கூறினார்,

என்ன எழுதினார்? காந்தியடிகளை உச்சிமேல் தூக்கிவைத்து மெச்சி, 'இந்தியநாடு' என்று இந்த நாடு அழைக்கப்படுவதற்குப் பதில் இனிமேல் 'காந்தி நாடு' என்று அழைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திக் கோரினார். செத்துப்போன காந்தி திரும்ப