பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4


ராபர்ட் பூத்பி என்பவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சர்ச்சிலின் கன்ஸர்வேடிவ் (மாறுதல் வேண்டாதார்) கட்சி அங்கத்தினர். கடந்த அக்டோபர் மாதம் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் அவர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? "கம்யூனிஸம் மேலைநாடுகளைத் தோற்கடித்துவிட்டது. செயற்கை கிரகங்களை விடுவதிலும், ஜலவாயு ஆயுதங்களிலும், இராஜ தந்திரத்திலும், தொழில் வளர்ச்சியிலும், இயந்திர நுட்பத் திறமையிலும், சகல துறைகளிலும் கம்யூனிஸம் முன்னேறிவிட்டது" என்று எழுதினார்.

ஏகாதிபத்தியவாதியாகிய பூத்பியை கம்யூனிஸத்தைப் பற்றி இவ்விதம் கருத்து தெரிவிக்கும்படி பிடரியைப் பிடித்து உந்தியிருக்கிற ஒரு சகாப்தத்திலே நாம் வாழுகிறோம், (கரகோஷம்.)

"அண்மையில் இந்திய அரசாங்கத் தலைவர் பண்டித ஜவஹர்லால் நேரு தமிழ் ராஜ்யத்தில் சுற்றுப் பிரயாணம் நடத்தினார். சென்னைக்கு வந்ததும், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில்: "இந்த சகாப்தம் செயற்கைச் சந்திரன் சகாப்தம்" என்று கூறினார். இதன் அர்த்தம் என்ன?

கம்யூனிஸம் உலகத்தை மட்டுமல்ல, பிரபஞ்சத்தையே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. (பலத்த கரகோஷம்) அப்படிப்பட்ட சகாப்தத்தில் நாம் இங்குக் கூடியிருக்கிறோம். இன்று கம்யூனிஸம் உலகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

பேசாதவர்கள் பேசுவது ஏன்?

"அமெரிக்க ஐக்கிய நாட்டில் தென்பகுதியில் சென்று பேசுகிறபொழுது, பழுத்த ஏகாதிபத்தியவாதியான பார்ன்ஸ் என்பான், ஜனநாயகத்தைப்பற்றி வெண்ணையாய் உருகி, நெய்யாய் ஒழுகவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஏன்? அவ்வாறு பேசாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள். அவர்கள் என்றால் எவர்கள்? (சிரிப்பு;) அந்தப் பக்கம் என்றால் எந்தப் பக்கம்? (மீண்டும் சிரிப்பு) அவர்கள், நீக்ரோக்கள்! (கர கோஷம்) அந்தப் பக்கம், கம்யூனிஸ்ட் முகாம்! (மீண்டும் கர கோஷம்) ஆகவே கம்யூனிஸத்தின் செல்வாக்கு நீக்ரோ மக்கள் எல்லோரையும் இழுத்துக் கொள்ளாமலிருக்க பார்ன்ஸ் நிர்ப்பந்தமாக ஜனநாயகம் பேசவேண்டியதேற்பட்டிருக்கிறது.

"நிறத்துவேஷம் பயங்கரமாகத் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் நீக்ரோக்களை வலை வீசிப் பிடிக்க ஜனநாயகம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுமட்டுமல்ல.

"முழுச் சம்பளப் பிரச்னையை எடுத்துக் கொள்ளுங்கள் ! ஏகாதிபத்யவாதிகள் இன்று ஆதரவுப் பேச்சுப் பேசுகிறார்கள். ஏன்? இல்லையானால், அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள்