பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



5

(சிரிப்பு) பாதிச் சம்பள பென்ஷனை எடுத்துக் கொள்ளுங்கள்! இல்லையானால் அவர்சள் அந்தப் பக்கம் போய் விடுவார்கள் (சிரிப்பு) பெண்ணுக்கும் ஆணுக்கும் சம சம்பளப் பிரச்னை எடுத்துக் கொள் ளுங்கள்! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார் கள்! (சிரிப்பு). நிறத்துவேஷத் தடைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடு வார்கள் (சிரிப்பு).

"இது மாதிரியான பிரச்னைகளயெல்லாம் இதுவரை பேசா

தவர்கள் இன்று பேசுகிறார்கள். ஏன்? இல்லாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் போய் விடுவார்கள்.

"மேற்கூறிய பிரச்னைகளிலெல்லாம் சோவியத் யூனியனில்

தீர்வு காணப்பட்டுவிட்டன. உலக மக்கள் சோவியத்தின் பக்கம் திரும்பிவிடாமலிருக்க, உலக ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடு கள் தட்டுத் தடுமாறி, காலம் தாமதித்து, அரைகுறையாக, வேண்டா வெறுப்போடு, இந்தத் திசையில் செல்லவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டிருக்கிறது."

இவ்வாறு உலகத்தையே ஆட்டிப் படைக்கவல்லதாக உலக

கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்துள்ள சகாப்தத்தில் நாம் கூடியிருக் கிறோம். (பலத்த கரகோஷம்) நமது கற்பனைக்குமெட்டாத வெற்றிச் சாதனைகளை சோவி யத் யூனியனில் கம்யூனிஸம் எவ்வாறு பெறமுடிந்தது? உலக இலக்கிய மகா மேதைகளில் ஒருவரான மாக்ஸிம் கார்க்கி என்ன சொல்லுகிறான் கேளுங்கள்!

நமது பாரதி இங்கு கூறியது போல், 'பாமரராய் விலங்கு

களாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு, குருடர் களாய், செவிடர்களாய் வாழ்கின்றோம்' என்று நம்மைப்பற்றிப் பாடினாரே அதேபோல், "அன்று ரஷ்யாவில் அறியாமையிலும் அறியாமையால் மூழ்கி நெளிந்த, பாமர மக்கள், கலப்பையின் நுகத்தடியில் கோவேறு கழுதையோடு பூட்டப்பட்டு உழவுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பாமர மக்கள் இன்று இலட்சக்கணக்கில் தொழில் நிபுணர்களாய், இன்ஜினியர்களாய், பேராசிரியர்களாய் கலைஞர்களாய், விஞ்ஞான மேதைகளாய் விளங்குகிறார்கள்" என்று கார்க்கி,கூறுகிறான்.

"சோஷலிஸ்ட் அரசாங்கம் பொது மக்களிடம் புதைந்து

கிடக்கும் எல்லையற்ற சிருஷ்டி சக்தியைக் கட்டவிழ்த்து விட்டிருப் பதுதான் இதற்கு உரிய காரணம் என்று எடுத்துக் காட்டுகிறான்.

இவ்வாறு கம்யூனிஸம் உலகப் பொதுமக்களின் கட்டுண்டு

கிடக்கும் படைப்பாற்றல்களுக்கு விடுதலை அளித்து வருகிறது.

ஜீ-2