பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழை உலகை வதைக்கும் கொடிய விதியைச் சுடுவாய் கொஞ்சம் சுகபோக ஞானக் குளிர் தருவைத் தான்நடுவாய் ஏழை எளியர் உன்னதம் எய்திடப் பாடு படுவாய் என்றென்றும் மாறும் தன்மைக்(கு) ஏற்ற மார்க்கமே தொடுவாய் இன்ப லோகம்- பெற ஏற்பாய் விஞ்ஞான வேகம் கற்பென்று பூச்சி காட்டும் கழுதைகளை நிந்தனை செய் கட்டற்று சிட்டுப் போற் களித்திடவே சிந்தனை செய் அற்பர் நினைப்பிலே மண் அடிக்கவே நிபந்தனை செய் ஆண் பெண் சமதையெனும் அமுத வாக்கை வந்தனை செய் ஆடவரே - செய்த - ஆதிக்கமே தவறே

125

125