பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே உள்ளக்கனிவும் மெய்சிலிர்ப்பும் நம்மிடையே பரவிப் பாயக் காண்கையில் ஜீவா அவர்களின் பேராற்றலுக்குச் சான்று கிடைத்து விடுகிறது. இலக்கியத் துறையிலும் ஜீவா அவர்கள் தமிழ்க் கவிதையின் பாரம்பரியத்தைக் காத்து வளர்க்க வந்த நல்ல வாரிசாகவே காட்சியளிக்கிறார். ஒரு நல்ல கவிதை அல்லது பாடலைக் கேட்கும்போது அதன் உள்ளடக்கத்தின் சிறப்பினாலோ உருவ அமைதியின் சிறப்பினாலோ சென்ற காலத்தை எட்டிப்பார்த்து விட்டுத் திரும்புகிற ஓர் உணர்ச்சியே உண்டாகும். அதுவே அது நல்ல கவிதை என்பதற்கும் ஒரு இலக்கணமாகும். அதே பொழுதில், நிகழ்கால நடப்பில் இரண்டு கால்களையும் நன்றாகப் பதிந்து நிற்கும் ஓர் அனுபவ உணர்ச்சியும், எதிர் கால கதி இப்படியாக வேண்டுமே என்கிற உள் வேட்கையின் சித்திரமும், தொனி செய்வதும் நல்ல கவிதைக்குரிய பிற இலக்கணங்களாம். ஜீவாவின் பாடல்களில் இவ் உணர்ச்சி அனுபவத்திற்கு - முக்காலமும் அறியும் உணர்வுக்கு - பங்கமேற்படுவதற்கு மாறாக நிறைவுதான் ஏற்படுகின்றது - எனவேதான் இந்தப் பாடல்களை அன்றுபோல் இன்றும். இன்றுபோல் என்றும், பாடிக் கொண்டேயிருக்கலாம். அவற்றின் பாடிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல; ஒளியிலே நின்று செயல்படவும் செய்யலாம், செயல்படவும் வேண்டும். ஜீவா அவர்கள் காட்டிய புதிய கூட்டுமையின் ஒளியிலே இந்திய விடுதலையைப் பேணல், சமூகச் சீர்திருத்த இயக்கத்தையும் முக்கியத்துவத்தோடு நடத்துதல் பிரச்சாரம் செய்தல், மொழிப்பற்று பொதுவுடைமைப் வளர்த்தல், பண்பாட்டுச் செல்வத்தைப் பேணி வளர்த்துப் புதுமை செய்தல், சமாதானத்தை அரண்செய்தல், சாதிமத சழக்கைகளை விலக்கல் போன்ற பணிகளை ஒருங்கே ஒரு முகமாக ஆற்றத் துணிவு கொள்ள வேண்டும். சம நாஞ்சில் நாட்டுச் செம்மண்ணாம் தமிழ் மண்ணில் பிறந்து தமிழகத்தின் சென்னியாம் சென்னையிலே மக்களும்

15

15