பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடுகெட்ட பன்றியும்கூட -- தேடிக்‌ கிடைத்ததைச்‌ சொந்தமென்று அடைத்துவைக்கும்‌; பாடுபடும்‌ உனக்கு மட்டும்‌ -- பாட்டின்‌ (பாடு) பலன்‌இல்லை என்றுசொல்வோர்‌. பாதக ரடா

நெற்றிநீர்‌ நிலத்தில்‌ விழவும்‌ -- நிதம்‌

நெஞ்சுநோக வும்‌உடம்பு நெக்கு விடவும்‌ பற்றிய பசிப்பிணி யோடு -- இங்கு பஞ்சுபடாப்‌ பாடுபட்டு வஞ்சம்‌ இன்றியே

்‌ சிற்றெ றும்பைப்‌ போலு ழைத்தாலும்‌ -- நீ தேடியதில்‌ பாத்தியதை செப்பக்‌ கூடாதாம்‌ மற்றவர்க்கே யாவும்‌ சொந்தமாம்‌ -- எனும்‌ வம்பர்‌ சொல்லை மிதித்திட மனம்தேறடா

(பாடு)

கஞ்சியின்றிச்‌ சாவது யாரார்‌? -- பிச்சைக்‌ காரராகி இரந்துண்டு மாள்வது யாரார்‌? கெஞ்சியே தவிப்பது யாரார்‌? - சற்றும்‌ கேள்விமுறை யின்றிமோசம்‌ போவது யாரார்‌? பஞ்சணையில்‌ தூங்குவது யார்‌? -- தினம்‌

பாலமுதக்‌ கொழுப்புற்று வாழுவது யார்‌? மிஞ்சுகின்ற வித்தி யாசத்தாள்‌ -- வீணர்‌ மேன்மையுறத்‌ தொழிலாளர்‌ வீழ்கிறாரடா

(பாடு)

சம்மா இருப்பவர்‌ தமக்கும்‌ -- பல சூழ்ச்சிகளால்‌

உழைப்போரைச்‌

சுரண்டு வோர்க்கும்‌

எம்மாதிரி இழிவாயினும்‌ -- பலே எத்தராகிப்‌ பிறர்பொருள்‌ நத்து வோருக்கும்‌

ஜீ-5

65

65