பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



viii

வாறு மறைக்க முடியாது. ஆனால், ஒரு ஞாயிறு மறைக் கப்பட்டுள்ளது - ஒர் இமயமலை மறைக்கப்பட்டுள்ளது. அந்த ஞாயிறு - அந்த இமயமலை திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார்தான்.

 இப்போது 65 அல்லது 70 அகவை உடையவர்கட்கே ஒரளவு ஞானியார் அடிகளாரைப் பற்றித் தெரியும். அவர் 1942 - ஆம் ஆண்டே இறுதி எய்தினார். அப்போது மிகவும் இளைஞராய் இருந்தவர்கள் நன்றாக அறிந்திருக்கமாட் டார்கள். அப்போதே ஒரளவு பெரியவராயிருந்தவர்களே அறிந்திருக்க முடியும். அப்போது சிறுவர்களாயிருந்த என்னைப் போன்றவர்கள் அவரிடம் படித்ததால் அவரை அறிந்திருக்கிறார்கள்.
 ஞானியார் அடிகளை அறியாத இக்காலத்தினர் அவரு டைய பெருமைச் சிறப்புகள் முழுமையும் அறிவார்களாயின் மூக்கின்மேல் விரல் வைத்து வியப்பார்கள். முன்னர் அறியாதார் இப்போது அறிந்து கொள்வதற்கு இந்த நூல் ஒரளவுவேனும் துணை புரியும். முன்னர் அறிந்தவர்கள் இப்போதும் ஞானியர் அடிகளாரைப் போற்றுகின்றனர்.
 இப்போது இந்த நூலை யான் எழுதத் தூண்டியவர், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தின் புரவலரான பேராசிரியர் உயர்திரு. ச. மெய்யப்பன் ஆவார். அவருக்கு யான் மிகவும் நன்றி செலுத்துகின்றேன். இத்தகைய நூல்கள் வெளிவரவேண்டும் என்று விரும்புகிற அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன்.

புதுச்சேரி - 11.

                                      சுந்தரசண்முகன் 

19 — 1 – 1989