பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii

உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சொல்ல வில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால், உங்களுடைய குருவாகிய திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரைப் பற்றியும், புதுச்சேரியில் நீங்கள் அறிந்த பாரதிதாசனைப் பற்றியும், மற்றும் நீங்கள் அறிந்து பழகிய புலவர் பெருமக்களைப் பற்றியும் எழுதுவீர்கள்; அதனால் அன்னாருடைய வாழ்க்கைக் குறிப்புகளையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பலருக்கும் கிடைக்கும் அல்லவா? அதற்காகவும் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சொல்கிறேன்” என்று விளக்கினார். செக்கோ சுலோவகியாத் தமிழ் அறிஞர், என்ன - என்ன என்று வினவினார். அவருக்கும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது. ‘சும்மா எழுதுங்கள் ஐயா! நாம் வெட்கப்பட்டுக் கொண்டே எவ்வளவோ வரலாற்றுக் குறிப்புகளைத் தெரிவிக்காமல் விட்டு விடுகிறோம் - நீங்கள் எழுதிக்கொடுங்கள் - வெளியிடட்டும்’ என்று பாவாணரும் ஊக்கப்படுத்தினார்.

ஆனால் யான் இதுவரை என் - வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை. எழுத உண்மையிலேயே வெட்கப்படுகிறேன். ஆனால், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின், வரலாற்றை மிகவும் சுருக்கமாக, 1973-ஆம் ஆண்டில் அவரது நூற்றாண்டு விழா நடைபெற்றபோது இருபத்து நான்கு பக்கத்தில் வெளியிட்டுப் பலர்க்கும் இலவசமாக வழங்கினேன்.

என் ஆசான் தமிழகம் போற்றும் தவத்திரு - ஞானியார் அடிகளாரின் வரலாற்றை இப்பொழுதுதான் இந்த நூல் வடிவத்தில் ஓரளவு விரிவாக எழுதியுள்ளேன். இன்னும் விரிவாக எழுதலாம். இப்போதுள்ள சூழ்நிலை இவ்வளவு எழுதவே இடம் தந்துள்ளது.

ஞாயிறை எல்லாக் காலத்திலும் முற்றிலும் மறைக்க முடியாது. இமயமலையினையும் கண்ணுக்குத் தெரியாத